முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என்ன எகிறீட்டு வரீங்க... நடிக்காதீங்க... ஜிபி முத்துவை அழவைத்த தனலட்சுமி - வெளியானது கலேபர ப்ரோமோ!

என்ன எகிறீட்டு வரீங்க... நடிக்காதீங்க... ஜிபி முத்துவை அழவைத்த தனலட்சுமி - வெளியானது கலேபர ப்ரோமோ!

தனலட்சுமி மற்றும் ஜிபி முத்து

தனலட்சுமி மற்றும் ஜிபி முத்து

நேற்றைய தினம் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுடன் மற்ற ஹவுஸ்மெட்கள் இணைந்து சாம்பார் எப்படி வேணும் என்று கேட்டுக்கொண்டு விளையாடி சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி மற்றும் ஜிபி முத்து இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஜிபி முத்து அழுகும் வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் ரூல்ஸ் அனைத்தும் முந்தைய சீசன்களில் இருந்து சற்று மாறுபட்டே உள்ளது. இதனால் ஹவுஸ்மெட்களிடையே குழப்பங்களும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுடன் மற்ற ஹவுஸ்மெட்கள் இணைந்து சாம்பார் எப்படி வேணும் என்று கேட்டுக்கொண்டு விளையாடி சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் தனலட்சுமி கேமராவைப் பார்த்து எனக்கு ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது, அவர் எல்லாருக்கும் ஜால்ரா போட்டுகிட்டு டீமில் உள்ள மற்றவர்களும் ஜால்ரா போடவேண்டும் என்று எதிர்பார்கிறார் என கடுப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அது எதுவும் காதில் கேட்காத ஜிபி முத்து ஃப்ளவர் வாஸ் தலையில் வைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிப்பதோடு நேற்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது.

இந்நிலையில் நான்காவது நாளான இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், நான் சாரினு சொன்னதுக்கு அவங்க என்ன முறைச்சு பாக்குறாங்க என்று ஜிபி முத்து சொல்ல, திரும்பி பாத்தது முறைச்சதானு கேட்ட தனலட்சுமி நடிக்காதீங்க நீங்க என்று ஜிபி முத்துவிடம் கூறினார்.

Also read... மது போதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய இயக்குநர்.. கார் பறிமுதல்!

நான் நடிக்கிறனு பாத்தியா நீ என்று ஜிபி முத்து கேட்க என்ன எகிறீட்டு வரீங்க வாஙக் பாப்போம் என்று தனலட்சுமி கூறுகிறார். என் பொண்ணு மாதிரி இருக்க நீ என்ன நடிக்கிறனு சொல்ற, உன் கால்ல விழுந்து உன்ன அம்மானு சொல்லட்டனு சொல்ல தனலட்சுமியும் அழுகிறார், ஜிபி முத்துவும் அழுகிறார். அவர்களை மற்ற ஹவுஸ்மெட்ஸ்கள் சமாதானம் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6