ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்கள் யார் யார்? - வெளியானது ப்ரோமோ!

பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்கள் யார் யார்? - வெளியானது ப்ரோமோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 8-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிக்ழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதில் கிச்சன் டீம் லீடராக ஷிவின் கணேசனும், கிளீனிங் டீம் லீடராக வி.ஜே.கதிரவனும், வெஷல் கிளீனிங் டீம் லீடராக ஜனனியும், டாய்லெட் கிளீனிங் லீடராக அமுதவானனும் செயல்பட்டு வந்தனர்.

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. இதற்கு சனிகிழமை நடந்த எபிசோடில் கமல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில்நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

Also read... சென்னை வந்த துணிவு அஜித்.. ஏர்போர்ட்டில் கூடிய ரசிகர்கள் கூட்டம்!

இந்நிலையில் பிக்பாஸில் 8-வது நாளான இன்று முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் நாமினேஷன் ப்ராசஸ் என்று பிக்பாஸ் கூற, போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கன்ஃபர்ஷன் ரூமிற்கு சென்று மற்ற போட்டியாளர்களை நாமினேட் செய்கின்றனர்.

முதலாவதாக ஆயிஷா வந்து விக்ரமன் மற்றும் ஷிவினையும் நாமினேட் செய்கிறார். அடுத்ததாக வரும் ராபர்ட் ஆயிஷாவையும், ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் சாந்தியையும், ஜிபி முத்து குயின்சியையும், குயின்சி ரக்‌ஷிதாவையும் நாமினேட் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6