ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிரிச்சா அசிங்கமா கேப்பேன்... நேரடியாக மோதிக்கொள்ளும் ஏடிகே மற்றும் அசீம்!

சிரிச்சா அசிங்கமா கேப்பேன்... நேரடியாக மோதிக்கொள்ளும் ஏடிகே மற்றும் அசீம்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இன்று பிக்பாஸ் வீட்டில் 67-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சனிகிழமை ராம் மற்றும் ஞாயிற்று கிழமை ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்டனர்.

Also read... வெளியானது ஆர்.ஜே.பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தொடர்ந்து மீதம் உள்ள 11 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மைனா நந்தினி தேர்வான நிலையில், விக்ரமன், ரச்சிதா, அசீம், ஜனனி, மணிகண்டன் மற்றும் ஏடிகே ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வார டாஸ்க்காக பிக்பாஸ் சொர்க்கமா, நரகமா என்ற தலைப்பில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர். இன்று பிக்பாஸ் வீட்டில் 67-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

அதில் சொர்க்கம் மற்றும் நரக்கத்தில் இருந்து ஒரு நபரை மாற்றிக்கொள்ள பிக்பாஸ் கூறுகிறார். அப்போது சொர்க்கத்தில் இருக்கும் ஏடிகேவை நரகத்திற்கு அழைப்பதாக விக்ரமனும் நரகத்தில் இருக்கும் கதிரவனை சொர்க்கத்திற்கு மாற்றுவதாக மணிகண்டனும் கூறுகின்றனர். அப்போது ஏடிகேவை நரகத்திற்கு மாற்றுவதற்கான காரணமாக ஷிவின் மற்றும் அசீம் எமோஷனல் ஸ்டேபிலிட்டு ஏடிகேவிற்கு இல்லை என்று கூறியதாக விக்ரமன் கூறுகிறார். இதனை கேட்ட ஏடிகே கடுப்பாகி உள்ளே செல்ல அப்போது ஷிவின் சிரிக்கிறார்.

இதனை பார்த்த ஏடிகே யாராவது சிரிச்சீங்கனா அசிங்கமா கேப்பேன் என்று கூற கோபமடைந்த அசீம், அசிங்கமா கேப்பனா என்ன அர்த்தம் என்று கேட்க அவர்களிடையே வாக்குவாதம் முற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6