ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவாஜியாக நடித்து ஹவுஸ்மேட்ஸ்களின் பாராட்டை பெற்ற அசீம் - வெளியானது வீடியோ!

சிவாஜியாக நடித்து ஹவுஸ்மேட்ஸ்களின் பாராட்டை பெற்ற அசீம் - வெளியானது வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வார கேப்டனாக மணிகண்டன் தேர்வான நிலையில், ஆயிஷா, ஜனனி, ராம், அசீம், ஏடிகே, கதிரவர்ன் ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 13 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மணிகண்டன் தேர்வான நிலையில், ஆயிஷா, ஜனனி, ராம், அசீம், ஏடிகே, கதிரவர்ன் ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Also read... WATCH: 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது விஜயின் தீ தளபதி பாடல்!

இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பல கதாப்பாத்திரங்களாக மாறி தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 60-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார்... நீங்களும் ஆகலாம் மக்களின் ஸ்டார் டாஸ்க்கில் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டு அதில் சிறந்த போட்டியாளர்கள் 5 பேர் தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வான 5 பேர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் நடக்க உள்ள பிரமாண்ட கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று பிக்பாஸ் ஒரு டாஸ்க்கை கூறிகிறார். அதில் அசீம் போட்டியிடுகிறார். அவர் சிவாஜியாக நடிப்பதை பார்த்து மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை வெகுவாக பாராட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6