ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எலிமினேஷனா அப்டினா? பிக்பாஸ் ரூல்ஸ் புரியாத ஜிபி முத்து... சிரிக்கும் ஹவுஸ்மெட்ஸ்கள் - வெளியானது ப்ரோமோ!

எலிமினேஷனா அப்டினா? பிக்பாஸ் ரூல்ஸ் புரியாத ஜிபி முத்து... சிரிக்கும் ஹவுஸ்மெட்ஸ்கள் - வெளியானது ப்ரோமோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸில் நான்காவது நாளான இன்று முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எலிமினேஷனா அப்டினா என்ன பிக்பாஸ் ரூல்ஸ் புரியாத ஜிபி முத்துவைப் பார்த்து ஹவுஸ்மெட்ஸ்கள் சிரிக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Also read... தீபாவளி ரேஸில் 'சர்தார்'.. 'பிரின்ஸ்'! அதிகாலை ஷோவுக்கு ப்ளான்! அரசுக்கு பறந்த கோரிக்கை

இந்நிலையில், நான்காவது நாளான இன்று முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கிளீனிங் டீமில் உள்ள ஆயிசா ஜிபி முத்துவை ஸ்வாப் செய்வதாக டீமின் லீடர் ஜனனி தெரிவித்தார். ஸ்வாப் செய்வதற்கான காரணமாக ஜிபி முத்து அவரது டீம் வேலைகளை மட்டும் செய்யாமல் மற்ற டீமில் உள்ளவர்களின் வேலையை செய்வது காரணமாக கூறப்பட்டது.

மேலும் தான் வெளியே சென்று தூங்குவது பிரச்னை இல்ல என்று ஜிபி முத்து கூற தூங்குறது மட்டும் இல்ல எலிமினேஷன்ல இருக்கீங்க என்று ஆயிஷா கூற எலிமினேஷனா என்று புரியாதது போல் கேட்கிறார். இதனைக் கேட்ட ஹவுஸ்மெட்ஸ்கள் சிரித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6