ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா? சுற்றுலா தளத்திற்கு வந்தீங்களா - ராபர்டை கேள்வி கேக்கும் ஜனனி!

பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா? சுற்றுலா தளத்திற்கு வந்தீங்களா - ராபர்டை கேள்வி கேக்கும் ஜனனி!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 37-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மணிகண்டன் வெற்றிபெற்ற நிலையில், இந்த வார எலிமினேஷனுக்காக தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ராபர்ட், ஆயிஷா, கதிரவன் மற்றும் ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Also read... தனுஷ் ரசிகர்களுக்கு கேப்டன் மில்லர் படக்குழு அறிவித்த நியூ அப்டேட்!

இன்று பிக்பாஸ் வீட்டில் 37-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வார லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் ரோஸ்ட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு 400 லக்ஜூரி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது ஜனனி மற்றும் ராபர்ட் ரோஸ்ட் செய்யும் போது ராபர்ட்டை பார்த்து ஜனனி எல்லோரையும் டார்லிங் டார்லிங்குனு கூப்டுறீங்க நீங்க பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீங்களா அல்லது சுற்றுலா தளத்திற்கு வந்தீங்களா என்று கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6