ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ள போட்டியார்கள் யார் யார்? - வெளியானது ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ள போட்டியார்கள் யார் யார்? - வெளியானது ப்ரோமோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் ரக்‌ஷிதா, அமுதவாணன், மணிகண்டன் மற்றும் விக்ரமன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் ஃப்ரீ சோனில் உள்ளனர். அதனால் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர் யாரும் இந்த 4 நபர்களை எலிமினேஷனிற்கு நாமினேட் செய்யமுடியாது.

இதனை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டில் 36-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோசை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற ஒவ்வொரு போட்டியாளர்களும் தலா இரண்டு நபர்களை தேர்வு செய்து கூறவேண்டும் என்று பிக்பாஸ் கூறினார்.

Also read... ஜொலிக்கும் உடையில் நடிகை ஹினா கான் - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

அதனை தொடர்ந்து கன்ஃபர்ஷன் ரூமிற்கு வந்த போட்டியாளர்கள் கூறும் பெயர்கள், ராபர்ட், நிவாஷினி, ஆயிஷா, ஜனனி, அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய பெயர்கள் தெரிவிக்கப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6