ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மகேஸ்வரி பேச ஆரம்பிக்கும் போதே நிறுத்திய அசீம் - வெளியானது முதல் ப்ரோமோ!

மகேஸ்வரி பேச ஆரம்பிக்கும் போதே நிறுத்திய அசீம் - வெளியானது முதல் ப்ரோமோ!

மகேஸ்வரி மற்றும் அசீம்

மகேஸ்வரி மற்றும் அசீம்

இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 10-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிக்ழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. இதற்கு சனிகிழமை நடந்த எபிசோடில் கமல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில்நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது. அதன் பெயர் ஒரு கத சொல்லட்டுமா? அதில், போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு நிமிடம் வழங்கப்படுகிறது அதற்குள் அவர்கள் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை கவரும் வகையில் கதையை கூற வேண்டும் அவ்வாறு கூறவில்லை என்றால் ப்ளாஸ்மா முன்பு உள்ள 3 பசர்களை அழுத்தி கதைய நிறுத்திவிடவும் செய்யலாம்.

இவ்வாறு நேற்றைய எபிசோடில் அசீம் முதலாவதாக கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே ரச்சிதா, மகேஸ்வரி, சாந்தி ஆகிய மூன்று பேரும் கதையை நிறுத்துகின்றனர்.

Also read... மீண்டும் கோலிவுட்டில் பார்வதி?! ரஞ்சித் - விக்ரம் இணைந்த படத்தில் கைகோக்கும் முக்கிய நடிகர்கள்!

இந்நிலையில் 10-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டது. அதில், மகேஸ்வரி கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே அசீம் முதலாவதாக பசரை அடித்துவிடுகிறார். அவரைத் தொடர்ந்து, நந்தினி மற்றும் அசல் ஆகியோர் பசரை அடிக்கின்றனர்.

அடுத்ததாக கதிர் பேசுகையில் சாந்தி மற்றும் விக்ரமனும், நந்தினி பேசுகையில் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் பசரை அடித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6