ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நேத்து ஜிபி முத்து... இன்னைக்கு தனலட்சுமி... பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒரே அழுக சத்தம் தான் - வெளியானது ப்ரோமோ!

நேத்து ஜிபி முத்து... இன்னைக்கு தனலட்சுமி... பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒரே அழுக சத்தம் தான் - வெளியானது ப்ரோமோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமி சீசன் 6 நிகழ்ச்சியில் 5-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிக்ழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐந்தாவது நாளான இன்று முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நேற்றைய தினத்தில் தனலட்சுமி ஜிபி முத்துவிடம் சண்டை போட்டது குறித்து பேசிய வெஷல் கிளீனிங் டீம் லீடர் ஜனனி, தனலட்சுமி பேசியது தவறு, ஜிபி முத்து அப்பா மாதரி அவரிடம் அவ்வளவு கோவமக நடந்துகொண்டது சரி இல்லை அதனால் இன்று தனலட்சுமியை ஸ்வாப் செய்வதாக ஜனனி கூறினார்.

Also read... துணிவு ரிலீஸ்.. ஒரு நாள் முன்னாடி.. விஜய்யின் வாரிசு படக் குழு போட்ட பக்கா ப்ளான் இதுதான்!

இதனால் வருத்தம் அடைந்த தனலட்சுமி தனியே வந்தும் அழுகிறார். நான் இந்த வீட்டுக்குள்ள வந்துருக்க கூடாது என்று கூறும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6