முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக்பாஸ் வீட்டில் ஒரு டீ-க்கு இவ்வளவு பிரச்னையா - வெளியானது கலேபர ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டில் ஒரு டீ-க்கு இவ்வளவு பிரச்னையா - வெளியானது கலேபர ப்ரோமோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இரண்டாவது நாளான இன்று வெளியான இரண்டாவது புரோமோ வீடியோவில், கிச்சன் கிளப்பில் உள்ள மகேஷ்வரி டாஸ்க் முடியும் வரை காலையில் ஒரு டீ, மாலையில் ஒரு டீ மட்டுமே வழங்கப்படும் என்று மகேஷ்வரி கூற, நீங்கள் பிக்பாஸ் இல்லை என்று அசீம் வாதம் செய்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் வீட்டில் ஒரு டீ-க்கு இவ்வளவு பிரச்னையா, இரண்டாவது நாளான இன்று இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று வெளியான இரண்டாவது புரோமோ வீடியோவில், கிச்சன் கிளப்பில் உள்ள மகேஷ்வரி டாஸ்க் முடியும் வரை காலையில் ஒரு டீ, மாலையில் ஒரு டீ மட்டுமே வழங்கப்படும் என்று மகேஷ்வரி கூற, நீங்கள் பிக்பாஸ் இல்லை என்று அசீம் வாதம் செய்கிறார்.

Also read... துணிவு லேட்டஸ்ட் அப்டேட்! அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வசூல் வேட்டைக்கு தயாராகும் போனி கபூர்!

மேலும் அனைத்து ஹவுஸ்மெட்களையும் அமர வைத்து கிச்சன் டீம் லீடர் ஷிவின் கணேசன் விளக்கமளிக்கும் போதும் ஹவுஸ்மெட்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Bigg Boss Tamil 6