ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாத்ரூமுக்குள் தூக்கிச் செல்லும் டாஸ்க்! வசமாய் சிக்கிய ஜிபி முத்து! பிக்பாஸின் கலகல ப்ரோமோ!

பாத்ரூமுக்குள் தூக்கிச் செல்லும் டாஸ்க்! வசமாய் சிக்கிய ஜிபி முத்து! பிக்பாஸின் கலகல ப்ரோமோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

நேற்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 கடந்த 9-ம் தேதி தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளான இன்று முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் கிச்சன் கிளப்பில் உள்ளவர்கள் மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கு சாப்பாட்டை ஊட்டி விடவேண்டும் என்றும், பாத்ரூம் கிளப்பில் உள்ளவர்கள் மற்ற ஹவுஸ்மேட்ஸ் செல்லும் போது அவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்து கூட்டி செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    Also read... 'சூப்பர்.. எக்ஸலண்ட்..' 'தனி ஒருவன்' இயக்குனரை பாராட்டித் தள்ளிய ரஜினி.! தெலுங்கால் கிடைத்த பெருமை!

    இதனை தொடர்ந்து ஜிபி முத்து பாத்ரூம் செல்லவேண்டும் என்று கூற அவரை ராபர்ட் மாஸ்டர் மற்றும் கதிரன் சேர்ந்து பாத்ரூமிற்கு தூக்கிச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6