ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஃப்ளையிங் கிஸ்! மழையில் டான்ஸ் - வேற லெவல் குஷியில் ஜிபி முத்து! கலகல பிக்பாஸ் ப்ரோமோ!

ஃப்ளையிங் கிஸ்! மழையில் டான்ஸ் - வேற லெவல் குஷியில் ஜிபி முத்து! கலகல பிக்பாஸ் ப்ரோமோ!

ஜி.பி.முத்து

ஜி.பி.முத்து

சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நேற்று தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்றைய நாளிற்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜி.பி.முத்து கேமெரா முன் நின்று நான் சந்தோஷமா இருக்கேன் நீங்க எல்லாம் ஜாலியா இருங்க என்று பறக்கும் முத்தத்தையும் தனது குடும்பத்திற்கு அளித்தார்.

    Also read... அமெரிக்கா மட்டும் இல்லை... இந்த நாடுகளிலும் வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்

    பின்பு ஜி.பி.முத்து பகலில் தூங்கியதால் பிக் பாஸ் வீட்டிற்குள் நாய் சத்தம் போடப்பட்டபோது பயந்து எழுந்த ஜி.பி.முத்து அதனை தனக்கே உரிய பாணியில் என்னது இது நாய் சத்தம் போடு என்று கூற மற்ற போட்டியாளர்கள் சிரிக்கின்றனர். அதனை தொடர்ந்து ஜி.பி.முத்து மழையில் டான்ஸ் ஆடுவதும் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6