ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிளப்பாக மாறிய பிக்பாஸ் வீடு - வெளியானது விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ!

கிளப்பாக மாறிய பிக்பாஸ் வீடு - வெளியானது விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த முதல் வீக் டாஸ்க்கில் 4 அணிகளாக பிரிந்து பிக்பாஸ் கிளப்ஹவுஸ் செயல்படப்போகிறது. அதில் கிச்சன் கிளப், வெசல் கிளப், கிளீனிங் கிளப், பாத்ரூம் கிளப் என பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த முதல் வீக் டாஸ்க்கில் 4 அணிகளாக பிரிந்து பிக்பாஸ் கிளப்ஹவுஸ் செயல்படப்போகிறது. அதில் கிச்சன் கிளப், வெசல் கிளப், கிளீனிங் கிளப், பாத்ரூம் கிளப் என பிரிக்கப்பட்டுள்ளது. அதில் கொடுப்படும் வேலைகளை வைத்து மற்ற அணியில் உள்ளவர்கள் யார் அந்த அணிக்கு தலைவராக செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று முன்னதாக வெளியான முதல் புரோமோ வீடியோவில், இந்த போட்டியாளர்களில் உங்களை மிகவும் கவராத நபர்களை தேர்வு செய்து கூறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    Also read... இப்படியே ஓடிப் போயிடு... செந்திலை எச்சரிக்கும் நாகு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

    போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் மனம் கவராத நபர்கள் குறித்து கூறிகின்றனர். அப்போது ஜி.பி.முத்து மட்டும் எனக்கு எல்லாரையும் பிடித்திருக்கு என்று கூற போட்டியாளர்கள் அப்படி சொல்ல கூடாது நீங்க யாரையாவது தேர்வு செய்தாகவேண்டும் என்று விளக்கினர். இறுதியில் அதிகம் கவராத போட்டியாளர்கள் என தேர்வான நான்கு நபர்களும் அடுத்த வார எலிமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6