ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கலவரம் ஸ்டார்ட்! பஞ்சாயத்தை தொடங்கிய பிக்பாஸ்.. வெளியானது பரபர ப்ரோமா!

கலவரம் ஸ்டார்ட்! பஞ்சாயத்தை தொடங்கிய பிக்பாஸ்.. வெளியானது பரபர ப்ரோமா!

பிக்பாஸ்

பிக்பாஸ்

ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நேற்று தொடங்கிய நிலையில் இன்று முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    Also read... சரத்குமாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி - காரணம் இதுதான்!

    இந்நிலையில் இன்று முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த சீசனின் முதல் டாஸ்க் என்று கூறி போட்டியாளர்களில் உங்களை மிகவும் கவராத நபர்களை தேர்வு செய்து கூறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் மனம் கவராத நபர்கள் குறித்து கூறிகின்றனர். அப்போது ஜி.பி.முத்து மட்டும் எனக்கு எல்லாரையும் பிடித்திருக்கு என்று கூற போட்டியாளர்கள் அப்படி சொல்ல கூடாது நீங்க யாரையாவது தேர்வு செய்தாகவேண்டும் என்று விளக்கினர். இறுதியில் அதிகம் கவராத போட்டியாளர்கள் என தேர்வான நான்கு நபர்களும் அடுத்த வார எலிமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6