ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? வைரலாகும் தகவல்!

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? வைரலாகும் தகவல்!

ஷிவின், கதிரவன், தனலட்சுமி

ஷிவின், கதிரவன், தனலட்சுமி

விக்ரமன், ரச்சிதா, அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சீசன் 1 முதல் சீசன் 5 வரை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ஆரவாரத்துடன் தொடங்கி தற்போது 75-வது நாளை எட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம்,ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து மீதம் உள்ள 10 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மணிகண்டன் தேர்வான நிலையில், விக்ரமன், ரச்சிதா, அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை சினிமா துறை மற்றும் அதை சார்ந்த துறைகளில் இருந்தும் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். இவர்களுக்கு மத்தியில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான தனலட்சுமியை மக்களில் ஒருவராக(commoner) தேர்ந்தெடுத்து இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்கள்.

Also read... பொது இடத்தில் ஆபாச வீடியோ.. உடையில் எல்லை மீறிய நடிகை உர்பி ஜாவேத் .. கைது செய்த போலீஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு வாரங்களில் யார் இந்த பொண்ணு சும்மா கத்தி சண்டை போட்டுகிட்டு இருக்கு என்று சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்ட தனலட்சுமி நாட்கள் அதிகரிக்கும் போது இவருக்கென்று ஒரு ரசிகர்களை அவர் சம்பாதித்தார்.

வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் மாதிரி டாஸ்குனு வந்துட்டா தனலட்சுமி என்று வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் சொல்லும் அளவிற்கு வீட்டில் உள்ள டாஸ்கில் அதிக ஈடுபாடுடன் கலந்து கொண்டவர். இந்நிலையில் தனலட்சுமி இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6