Home /News /entertainment /

பிக் பாஸில் இன்று டபுள் எவிக்‌ஷன்.. வீட்டை விட்டு வெளியேறும் அந்த இருவர் யார் தெரியுமா?

பிக் பாஸில் இன்று டபுள் எவிக்‌ஷன்.. வீட்டை விட்டு வெளியேறும் அந்த இருவர் யார் தெரியுமா?

பிக்பாஸ்

பிக்பாஸ்

Bigg Boss Today Promo : இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமாக்கள் வெளியானதில் இன்று டபுள் எவிக்‌ஷன் என்று தெரியவந்துள்ளது.

    பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை.எனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் அதே போல் தான் இருக்கும் என்று நினைத்த சிலருக்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அப்படியில்லை என்று போட்டியாளர்கள் நிரூபித்து வருகின்றனர். இந்த சீசனின் தனித்துவமே போட்டியின் போது வீட்டில் உள்ள அனைவரும் தாறுமாறாக சண்டைப்போட்டு கொண்டாலும் டாஸ்க் முடிந்த பின்பு அனைவரும் சேர்ந்துவிடுகின்றனர்.

    84 நாட்கள் வெற்றிகரமாக கடந்து ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து செல்லும் ப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்றது.அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து சென்ற நிலையில், அமீரின் குடும்பத்தினர் நேற்று வந்தனர்.வரும் போதே டான்ஸ் மோடில் என்ட்ரி கொடுத்தனர். பின்பு வீட்டை விட்டு அலீனா மற்றும் குடும்பத்தினர் போகும் போதும் பிக்பாஸ் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆட சொன்னார்.அலீனாவின் டான்ஸை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் வாய் அடைத்து போய்விட்டார்கள்.



    இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகிவுள்ளது.அதில் முதல் ப்ரோமோவில் இன்று இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்கள், அது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது என ஜாடையாக கமல் கூறுகிறார்.


    இரண்டாவது ப்ரோமோவில் இன்று நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களை ஜோடியாக அமர சொல்கிறார். எனக்கு ஏன் ஓட்டு போடணும், இவருக்கு ஏன் ஓட்டு போடக்கூடாதுன்னு காரணத்த சொல்லுங்க என்று கேட்கிறார். நிரூப், இன்னும் கேம் உள்ளயே சிபி வரலன்னு நான் நினைக்கிறேன் என்று கூற, வருண் அமீரை பற்றி இவருக்கு காலில் அடிப்பட்டதே இவரின் அலட்சியத்தால் தான் என்று சுட்டி காட்டுகிறார்.தாமரை என்கிட்ட இருக்க தைரியம் பாவனி கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன் என்று கூற, அதற்கு கமலோ தெளிவா அடிச்சிடாங்கன்னு சொல்லுகிறார்.

    also read : எங்க இருக்கீங்கன்னு தேட வேண்டியதா இருக்கு.. முகத்திற்கு நேராக போட்டுடைக்கும் கமல்


    அக்‌ஷாரா ராஜுவை பற்றி எதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ராஜூ அண்ணாக்கு ஓட் போட வேணாம்னு சொல்ல எனக்கு ரீஸனே இல்லை, இவன் ஜெயிச்சா நான் சந்தோஷ படுவேன்.ஆனால் எனக்கு ஓட்டு கண்டிப்பா போட்டுறுங்க என்று கூறி ஒட்டுமொத்த மக்களின் கைத்தட்டை தட்டிசென்று விட்டார்.இதை பார்த்த ராஜூ டைமிங் சென்ஸில், ‘அப்ப நானும் அப்படியே சொல்லிருப்பேன்ல சார்’ என்று நய்யாண்டி செய்ய வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்கின்றனர்.



    இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு அக்‌ஷரா மற்றும் வருண் வெளியேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருவரின் நட்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Bigg Boss Tamil

    அடுத்த செய்தி