• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: கேவலமா இருக்கு இதெல்லாம்... பிரியங்காவுக்கு அபிஷேக் கொடுத்த அட்வைஸ்

Bigg Boss Tamil 5: கேவலமா இருக்கு இதெல்லாம்... பிரியங்காவுக்கு அபிஷேக் கொடுத்த அட்வைஸ்

பிரியங்காவுக்கு அபிஷேக் கொடுத்த அட்வைஸ்

பிரியங்காவுக்கு அபிஷேக் கொடுத்த அட்வைஸ்

தற்போது 2வது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில், தாமைரை பிரியங்காவை பற்றி என்ன நினைக்கிறார் என்பது பற்றி அபிஷேக் பிரியங்கவிடம் கூறுவது போல இருக்கிறது.

  • Share this:
பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துவிட்டது. மேலும் கடந்த வாரம் இசைவாணி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து 50 வது நாளான நேற்று இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி நடைபெற்றது. அதில் ராஜு தான் சிறப்பாக விளையாடினார். ஆனால் இறுதியில் அபி தான் தலைவர் ஆனார். தலைவர் பதவிக்கு போட்டிபோட்ட தாமரைக்கும் பிரியங்காவுக்கும் சூடான வாக்குவாதங்கள் நடந்தன. இதற்கடுத்ததாக இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. அதில் பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி பெரி ஆகியோர் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்த நிலையில், 51ம் நாளான இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியானது. அதில், ஹவுஸ் மேட்சுக்கு புதிய டாஸ்க் வழங்கப்பட்டது. எல்லா சீசனிலும் கொடுக்கப்படும் அதே ஸ்கூல் டாஸ்க் தான் அது. அதில் ராஜு மற்றும் அபிஷேக் ஆகியோர் ஆசிரியராக இருக்கின்றனர். சிபி பிரின்சிபல் பதவியில் இருக்கிறார். மற்றவர்கள் பள்ளி  உடை அணிந்து இருக்கிறார்கள்.

மேலும் சிபி சில விதிமுறைகளும் விதித்திருக்கிறார். ஐக்கி, அக்ஷரா ஆகியோர் தங்களது தலையை ப்ளாக் செய்ய வேண்டும் என அவர் கண்டிஷன் போட்டிருக்கிறார். அப்போது தான் ஸ்கூலுக்கு உள்ளே விடுவேன் என விதிக்கிறார். அதனால் அவர்களும் வேறு வழியின்றி அதை செய்கின்றனர். மேலும் தாமரையும் மரியாதையாக பேச வேண்டும் என அவர் சொல்கிறார். பள்ளி மாணவர்கள் அனைவரும் ஸ்கூலுக்கு செல்லத் தயாராகின்றனர்.



Also read... முதல் முறையாக சின்னத்திரையில் மாகாபா மனைவி- வைரலாகும் ப்ரோமோ!

இந்த நிலையில் தற்போது 2வது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில், தாமரை பிரியங்காவை பற்றி என்ன நினைக்கிறார் என்பது பற்றி அபிஷேக், பிரியங்காவிடம் கூறுவது போல இருக்கிறது. அதில் அபிஷேக் கூறியதாவது, "தாமரை என்ன சொல்றாங்கன்னா... நீங்க மத்தவங்க கிட்ட காட்டற அன்புள வந்து சில பேர் தான் உண்மையா இருக்காங்க... உங்கள விலைக்கு வாங்கிடலாம்னு சொல்லறாங்க.. ஜால்ரானு சொல்லறாங்க..." என்று கூறிய அபிஷேக், " நீங்க இந்த வாரத்தையாச்சும் யூஸ் பண்ணிக்கோங்க, உங்க வாய்ஸ்-அ காட்றதுக்கு.. கேவலமா இருக்கு இதெல்லாம் கேட்கவும்.. பார்க்கவும்" என்று பிரியங்காவுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். இவர்களுடன் பவானியும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.



அடுத்த காட்சி, டைனிங் ஏரியாவில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் தாமரை கேமராவை பார்த்து "செம்ம" என்று சொல்கிறார். மீண்டும், பிரியங்கா அபிஷேக் உரையாடல் காண்பிக்கப்படுகிறது. அதில் பிரியங்கா கூறுவதாவது, " சார், இத தாமரைக்கோ இல்ல யாருக்கோ ப்ரூவ் பண்றதுக்காகலாம் நான் இங்க உட்காரல சார்." என்று கூறுகிறார். உடனே அபிஷேக் " எனக்கு என்னங்க... நீங்க என்ன வேணா பண்ணுங்க" என்று தெரிவிக்கிறார். அடுத்த காட்சியில் தாமரை கேமராவை பார்த்து " ரொம்ப சந்தோஷம்" என்று சொல்கிறார். இந்த வாரம் ஆரம்பமானதில் இருந்தே பிரியங்காவுக்கும் தாமரைக்கும் வாக்குவாதம் வலுக்க ஆரம்பித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இனி என்ன நடக்க போகிறதோ.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: