• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: தலைவர் பதவிக்கு மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள் - கடுப்பான சிபி!

Bigg Boss Tamil 5: தலைவர் பதவிக்கு மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள் - கடுப்பான சிபி!

தலைவர் பதவிக்கு மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்

தலைவர் பதவிக்கு மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்

அடித்து பிடித்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் பால் கறக்கலாம் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளதால் இரண்டு அணியினரும் சண்டை போட்டு கொள்வது இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது.

  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு வாரங்களை கடந்து கோலகமாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது 14 பேர் போட்டியில் உள்ளனர். இவர்களில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்று தீபாவளியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொதுவாக விஜய் டிவியில் தீபாவளி பண்டிகை அன்று இரவு வேறு ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியையே சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இரவு 7 மணி முதல் 11 மணி நேரம் வரை என சுமார் 4 மணி நேரம் ஒளிபரப்பாகிறது.

அதில் மதுரை முத்து பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து பட்டிமன்றத்தை நடத்தினார். அதன் பிறகு, பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த சூப்பர் சிங்கர் டீம் ஆடல், பாடல் என போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். இப்படியாக பிக் பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி, குடும்பத்தினரை நினைவூட்டியுள்ளது.

ஒரு மாதத்துக்கும் மேலாக, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தீபாவளி நாளில், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்து அழுதனர். மேலும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டில் இருந்து ஒரு கடிதம் மற்றும் விரும்பிய உணவும் வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. இறுதியில் பிக் பாஸ், போட்டியாளர்கள் அனைவருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், பிக் பாஸ் ரசிகர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கூறினர்.

Also read... எனக்கு பிடிச்ச ஹீரோ இவர்தான்... வைரலாகும் விஷாலின் வீடியோ!

இந்த நிலையில் வழக்கம் போல டாஸ்குகள் தொடங்கப்படுவது இன்றைய முதல் ப்ரோமோவில் தெரிந்தது. அதில் அடுத்தவார தலைவர் டாஸ்குக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்படுகிறது. ‘செண்பகமே செண்பகமே’ என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பால் கறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் அடித்து புடித்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் பால் கறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் கேப்டன்சி டாஸ்க்கிற்காக ஹவுஸ்மேட்ஸ்கள் இரண்டு அணியாக பிரிந்து ப்ளூ மற்றும் ஆரஞ்சு உடை அணிந்துள்ளனர். அடித்து பிடித்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் பால் கறக்கலாம் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளதால் இரண்டு அணியினரும் சண்டை போட்டு கொள்வது இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. ஒருவருக்கொருவர் முட்டி, மோதிக்கொள்வதால் பால் கீழே சிந்திவிடுவதும் தெரிகிறது. மேலும் சிபி கோபமாக அனைத்தையும் தூக்கி எரிகிறார், இதனை பார்த்து அக்ஷ்ரா கோபமாக கத்தும் காட்சிகளும் உள்ளது. இதனால் இன்று விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: