• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: நீலாம்பரியாக மாறாத அக்ஷரா - இமான் அதிருப்தி!

Bigg Boss Tamil 5: நீலாம்பரியாக மாறாத அக்ஷரா - இமான் அதிருப்தி!

நீலாம்பரியாக மாறாத அக்ஷரா - இமான் அதிருப்தி

நீலாம்பரியாக மாறாத அக்ஷரா - இமான் அதிருப்தி

அபினய், ராஜு, பிரியங்கா, சிபி, இசைவாணி ஆகியோர் தங்களது டாஸ்கை சிறப்பாக செய்தனர்.

  • Share this:
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறியுள்ளனர்.

தற்போது இசைவாணி, ராஜு, மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப் ஆகிய 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார தலைவராக வருண் இருக்கிறார். இந்தநிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், "சினிமா சினிமா" என்ற பெயரில் டான்ஸ் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் கதாபாத்திரத்திற்கான பாடல் ப்ளே செய்யப்படும் போதெல்லாம் நீங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து நடனம் ஆட வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். மேலும் நடனம் ஆடும் நேரத்தை தவிர பிற நேரங்களில் தங்களது கதாபாத்திரத்துடன் ஒன்றி நடந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

அதில் சிபிக்கு - ரஜினிகாந்த், வருண் - சிட்டி ரோபோ, இசைவாணி - சந்திரமுகி, ஸ்ருதி - ஜெனிலியா, அக்ஷ்ரா - நீலாம்பரி, பாவ்னி - கஜினி, பிரியங்கா - காண்ட்ராக்டர் நேசமணி, மதுமிதா - 23ம் புலிகேசி, அபினய் - தெய்வத்திரு திரைப்பட கிருஷ்ணா, நிரூப் - அம்பி, தாமரை - கனகா, ராஜு - எம்.ஆர். ராதா, இமான் - நடிகர் திலகம் சிவாஜி கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் ஒன்றி இருந்தனர்.

நிருப், அம்பி கெட்டப்பிற்காக தனது தாடியை எடுத்துவிட்டார். அபினய், ராஜு, பிரியங்கா, சிபி, இசைவாணி ஆகியோர் தங்களது டாஸ்கை சிறப்பாக செய்தனர். நேற்று முதலில் தாமரை பாடல் இசைக்கப்பட்டது. உடனடியாக மேடைக்கு சென்று அவர் நடனமாடினார். இதனை தொடர்ந்து சிபி, இசைவாணி சிறப்பாக டான்ஸ் ஆடினர். இத்துடன் இந்த டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டது.

Also read... தீபாவளிக்கு குடும்பத்துடன் சிரித்து மகிழ ஹாட் ஸ்டார் வெளியிடும் எம்ஜிஆர் மகன்!

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பஞ்சபூதங்களில் ஒன்றான 'நிலம் வாரம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நிலம் காயின் வைத்திருக்கும் நிரூப் கட்டுப்பாட்டில் தான் கடந்த இரண்டு நாட்களாக படுக்கை அறை உள்ளது. எனவே நிருப் அனுமதியின்றி படுக்கை அறைக்கு செல்பவர்களுக்கு தண்டைகள் கொடுத்து வருகிறார். நேற்று ஸ்ருதி, பாவ்னி, மது உத்தரவை மீறியதால் அவர்களை பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சாப்பிட வைத்தார். இதன் தொடர்ச்சியாக பாவ்னி இன்று இரவு வெளியே தூங்க வேண்டும் என நிரூப் கூறுவதும் அதற்கு காரணம் கேட்டு பாவ்னி சண்டை போடும் காட்சிகளும் இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது.இந்தநிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், "சினிமா சினிமா" டாஸ்கில் யாரெல்லாம் சிறப்பாக செயல்படவில்லை என பிக் பாஸ் கேள்வி எழுப்புகிறார். அதில் இமான், அக்ஷ்ராவை கூறுகிறார். ஒரு வேலை அக்ஷ்ரா, நீலம்பரி கதாபாத்திரத்தை பார்க்கவில்லையா? அந்த படம் குறித்து தெரியவில்லையா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என இமான் கூறுகிறார். அப்போது குறுக்கிடும் சிபி, இல்லை அக்ஷ்ரா அவரது கதாபாத்திரத்தை நன்றாக செய்தார் என்கிறார். ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத இமான், இல்லை எனக்கு சரியாக தெரியவில்லை என்கிறார். மேலும் அக்ஷ்ரா, என்னிடம் நீலாம்பரி போல ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்கிறார். அதற்கு அக்ஷ்ரா, உங்கள் வயதிற்கு நீலாம்பரி போல சொடக்கு போட்டு பேசுவதை எனக்கு சரியாக தெரியவில்லை என கூறும் காட்சிகள் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: