• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Promo: அபிஷேக்கின் கேவலமான கேம் பிளான் - கடுப்பான பிரியங்கா, வருண்!

Bigg Boss Promo: அபிஷேக்கின் கேவலமான கேம் பிளான் - கடுப்பான பிரியங்கா, வருண்!

கடுப்பான பிரியங்கா, வருண்

கடுப்பான பிரியங்கா, வருண்

Bigg Boss Promo: இந்த சீசனில் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கேம் விளையாட, அபிஷேக் ராஜா மற்றவர்களை மூளை சலவை செய்து தனக்கு என்ன வேண்டுமோ அதனை நடத்தி வருகிறார்.

  • Share this:
விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

தற்போது 16 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் லிஸ்டில் உள்ளனர். இந்தநிலையில் நாமினேஷன் மாற்றம் கொண்டு வரும் வகையில் பஞ்சதந்திரம் என்ற புதிய டாஸ்க் ஒன்று நேற்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இதில் விலை மதிக்க முடியாத நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்தார். இதில் ஒருவர் காயினை திருட அவரிடம் இருந்து மற்றொருவர் திருட என நேற்று முழுவதும் இந்த டாஸ்க் நடைபெற்றது. ஆனால் இதில் குழுவாக விளையாடியதால் சற்று போரிங்காக சென்றது. இறுதியாக அபிநவ் மறைத்து வைத்த இரண்டு காயின்களை நிரூப் எடுத்துவிட்டார்.

ஆனால் அதனை அபிநவ் பார்த்துவிட்டதால் நிரூப் பாதாள சிறையில் அடைத்து வைக்கப்பட்டார். மேலும் அந்த இரண்டு காயின்களும் வழக்கம்போல கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டது. அதில் ஒன்றை பாவ்னி எடுத்து ஸ்ருதியிடம் கொடுத்துவிட்டார். இதனால் தற்போது ஸ்ருதி, அபிஷேக், பாவனி மற்றும் பிரியங்கா ஆகியோரிடம் தலா ஒரு காயின் உள்ளது. இந்த டாஸ்கில் வெற்றி பெறுவது யார் என்பது இன்று தெரியவரும்.இந்த சீசனில் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கேம் விளையாட, அபிஷேக் ராஜா மற்றவர்களை மூளை சலவை செய்து தனக்கு என்ன வேண்டுமோ அதனை நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு ஹெட்டர்ஸ் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், கேமரா முன் நின்று, இந்த வீட்டில் மெசேஜ் கேம் விளையாடுகிறார்கள், இது எந்த விதத்தில் நியாயம் என ஸ்ருதி பேசி கொண்டிருக்கிறார்.

மறுபுறம் வருண் மற்றும் அபிஷேக் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் பிரியங்கா, இங்கு சரி தவறு என எதுவும் இல்லை,ஆனால் மற்றவர்களை மூளை சலவை செய்வது தவறு என கூறுகிறார். அதற்கு அபிஷேக் நான் அப்படி தான் செய்வேன் என கூற, அப்போது குறுக்கிடும் வருண், அதே போலத்தான் நான் அதனை தடுப்பது தவறு என நீயும் கூறமுடியாது என்கிறார். அதற்கு பிரியங்கா, இங்கு எதோ நடக்கிறது என்கிறார்.

Also read... ஓ மணப்பெண்ணே விழாவில் கலந்து கொண்ட ப்ரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண் - புகைப்படங்கள்!

முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில், பிரியங்காவிடம் உங்க கூடவே இருந்துட்டு உங்கள ஒருத்தன் செஞ்சிட்டு இருக்கான் என ராஜு கூற, 'நான் தான் செய்றேன். அப்போதான் எனக்கு அட்டென்சன் கிடைக்கும், ரொம்ப சிம்பிள், பிரியங்கா உடன் ஒட்டி இருந்தால் தான் என் மூஞ்சி டிவியில் தெரியும் என அபிஷேக் கூறுகிறார். மேலும் இமான் அண்ணாச்சி உடன் வாக்குவாதம் செய்தால் தான் என் மூஞ்சி டிவியில் வரும் என அபிஷேக் சொல்ல, 'அது ரொம்ப கேவலமான எண்ணம்' என இமான் விமர்சிக்கிறார். ஏற்கனவே அபிஷேக் குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவரே அவர் செய்து வரும் தவறுகளை ஒப்புக்கொள்கிறார். மேலும் இந்த வார நாமினேஷனிலும் அபிஷேக் இருக்கும் நிலையில், அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: