• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss Tamil : ரூல் பிரேக்கர் அண்ணாச்சி.. திடீர் வில்லன் வருண்! கன்டென்ட்டுக்கு இப்படி இறங்கிட்டாங்களே?

Bigg Boss Tamil : ரூல் பிரேக்கர் அண்ணாச்சி.. திடீர் வில்லன் வருண்! கன்டென்ட்டுக்கு இப்படி இறங்கிட்டாங்களே?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

bigg boss tamil season 5 Day 29 review : கடந்த வார கமல்ஹாசன் எபிசோடுக்கு பின்பு அண்ணாச்சி மற்றும் வருணின் நடவடிக்கைகளில் அப்படி ஒரு மாற்றம்

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5ல் இமான் அண்ணாச்சி மற்றும் வருணிடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்துக்கு கன்டென்ட் பற்றாக்குறை தான் காரணம் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

  பிக் பாஸ் வீட்டில் 29 நாள் காலை ‘டார்லிங் டம்பங்கு’ பாடலுடன் நாள் தொடங்கியது. வீட்டில் சின்ன பொண்ணு சென்ற தடம் கூட நமக்கு தெரியவில்லை. யாரும் அவரை பற்றி எந்த இடத்திலும் பேசாததால் ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆள் வீட்டை விட்டு போனாரா? என கேட்க தோன்றும் அளவுக்கு சூழ்நிலை இருந்தது. லட்டு லட்டு என கொஞ்சி கொண்டிருந்த அக்‌ஷராவும் சின்ன பொண்ணுவை மிஸ் செய்வது போல் தெரியவில்லை. காலையிலே கொளுத்தி போட்டார் பிக் பாஸ். நிலம் ஆற்றலுக்கான வாரம் தொடங்கியது. உயர்ந்த மனிதன் நிரூப் தான் அந்த ஆற்றலை கொண்ட நாணயத்தை கைப்பற்றிய சொந்தக்காரர்.. இந்த வாரம் முழுக்க பெட்ரூம் ஏரியாவில் ஆளுமை தரப்பட்டது. அதற்கான விதிமுறைகளை லிவிங் ஏரியாவில் வைத்து நிரூப் வாசித்தார். இதில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் இதுதான். நிரூப்புக்கு ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். அந்த உதவியாளரை நிரூப்பே தேர்வு செய்ய வேண்டும் என்பது தான். (பிக் பாஸின் மைண்ட் வாய்ஸ்.. மதுமிதான் என்றால் லவ் டிராக் வைத்து ஓட்டிவிடலாம். அக்‌ஷரா என்றால் அடிதடி தான்)

  நிரூப், அக்‌ஷராவை தேர்ந்தெடுக்க சிறப்பான தீபாவளி வாரம் தொடங்கியது. அதற்கு அக்‌ஷரா விருப்பமில்லை என்றார். ஆனால் நிரூப் அக்‌ஷரா தான் வேண்டும் என்றார். அக்‌ஷரா வீட்டை விட்டு வெளியே போறேன் இல்லனா தண்டனை அனுபவிக்கிறேன் என்றார். ஆனால் பிக் பாஸ் முடிவை நிரூப்பிடமே கொடுத்தார். வேறு வழியில்லாமல் அக்‌ஷ்ரா பதிவியை ஏற்றுக் கொண்டு நிரூப்பின் உதவியாளர் ஆனார். அடுத்த நிமிடமே புது ரூல்ஸ் போட தொடங்கினார் நிரூப். என்னிடம் பேச வேண்டும் என்றால் முதலில் அக்‌ஷராவிடம் பேசி அவரிடம் சொல்லுங்கள் அவர், என்னிடம் அதை தெரியப்படுத்துவார் என்றார். பெட்ரூமில் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல கூடாது கூறினார்.

  அதற்குள், அக்‌ஷராவும் நிரூப்பும் சண்டையை பேசி முடிக்க கார்டன் ஏரியாவுக்கு சென்றனர். குளிப்பதற்கு ட்ரெஸ் எடுக்க ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸூம் வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நிரூப்பும் அக்‌ஷராவும் கூலாக பேசிக் கொண்டிருக்க, பொறுமை இழந்த அண்ணாச்சி முதல் ரூல் பேக்கராக பெட்ரூமில் நுழைந்து ட்ரெஸை எடுக்கிறார். இதனால் இசையும் பெட்ரூமில் செல்லுவேன் என அடம் பிடிக்க, பிரியாங்கா நிரூப்பிடம் கொளுத்தி போடும் வேலையை செய்தார். உடனே நிரூப்பும் அக்‌ஷராவும் பெட்ரூமில் சென்று பேச தொடங்கினர். யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. டவலை எடுக்க முயற்சித்த ராஜூ பாயும் நிரூப்பிடம் சிக்கி கொண்டார். மொத்த ஹவுஸ்மேட்ஸூம் அண்ணாச்சியை போட்டு கொடுத்தது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் கடுப்பான அவர், பிரியங்காவிடம் மல்லு கட்டினார். ஆனால் பிரியங்கா இசையை போல இல்லை என்பது அண்ணாச்சி மறந்து விட்டார் நெத்தியடி பதில் சொல்லி ரூப் பிரேக்கர் அண்ணாச்சி என்ற பட்டப்பெயரையும் வைத்து ஆஃப் செய்தார் பிரியங்கா.

  அடுத்து, இந்த வார தலைவருக்கான டாஸ்க் ஆக்டிவிட்டி ஏரியாவில் நடந்தது. போன வாரம் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட சிபியும், ராஜூவும் களம் இறங்கினர். ஃபுட் பால் கேம்.. புல்லுக்கு பதில் மழை சேரு. சிபி அசத்தலாக விளையாடி 3 கோல் போட்டார். யதர்ச்சையாக பாலை எட்டி உதைத்த அபிநவும் ராஜூ பாயின் கோபத்திற்கு ஆளானார். சிபி தலைவர் டாஸ்கில் வெற்றி பெற்றார். ஆனால் தலைவர் ஆகவில்லை. வழக்கம் போல் நாணயம் கொண்ட 5 பேரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது, யாரும் எதிர்பார்க்கவில்லை சிபி உட்பட, வருண் தலைவரை மாற்ற போவதாக கூறி ஷாக் கொடுத்தார். அதற்கு பிக் பாஸ் ஒரு க்கு வைத்தார். தனியாக பாத்ரூம் கழுவ வேண்டும் என்று, அதற்கு, உடன்பட்டு, வருண் தலைவர் பொறுப்பை ஏற்றார். சிபி தன் பங்குக்கு வருணிடம் கேட்டு பார்த்தார், ஆனால் வருண் ஒரு முடிவில் இருந்தது பேச்சில் தெரிந்தது. நீ ஏற்கெனவே தலைவராக இருந்து விட்டாய், ஒருமுறை நான் இருக்கிறேன் என்றார். கடையில் வருண் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  வருணின் கேம் பிளானை பாவனி வரவேற்றார். அவருக்கு அவர் பெயர் இந்த நாமினேஷன் லிஸ்டில் வரப்போவது தெரியும். அதனால் தான் இப்படி செய்தார் என்றார். அபிநனவும் தானும் கேமிராவில் தெரிய வேண்டும் என்பதற்கு தனது கருத்தை பதிவு செய்தார். அடுத்தது இந்த வார நாமினேஷன். தீபாவளி வாரம் என்பதால் சற்று வித்யாசமாக கார்டன் ஏரியாவில் செட் போடப்பட்டது.
  இந்த முறை நாமினேஷன் லிஸ்டில் இருந்து காப்பாற்ற விரும்புபவர்களின் பெயரை ஹவுஸ்மேட்ஸ் சொல்ல வேண்டும் என்பது தான் டாஸ்க். காப்பாற்றப்படாதவர்கள் பெயர் லிஸ்டில் வந்த அபிநவ், ஐக்கி, அக்‌ஷரா, ஸ்ருதி, நிரூப், பாவனி, சிபி, ஆகியோர் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

  பிக் பாஸ் அக்‌ஷராவை வம்பிழுக்கும் நிரூப்

  ஸ்பான்சர் கிஃப்ட்டாக ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் கப் கேக் கொடுக்கப்பட்டது பிரியங்கா முகத்தில் அப்படியொரு ஆனந்தம். நிலம் தலைவர் நிரூப் புது புது சட்ட திருத்தங்களை போட்டு கொண்டிருந்தார். இசைவாணியையே சர்வதிகாரி என்றவர் நிரூப் ரூல்லையை கேட்டு பேச்சு மூச்சும் இல்லாமல் அமர்ந்து இருந்தார் அண்ணாச்சி. கடந்த வார கமல்ஹாசன் எபிசோடுக்கு பின்பு அண்ணாச்சி மற்றும் வருணின் நடவடிக்கைகளில் அப்படி ஒரு மாற்றம். கன்டென்ட்டுக்கு வீட்டில் பஞ்சம் என தெரிந்துவிட்டு இப்படி இறங்கி விட்டார்களா? இல்லை இதுதான் இவர்களின் நிஜ முகமா? ரசிகர்களை போலவே நமக்கும் குழப்பமாக தான் இருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: