விஜ்ய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 80 நாட்களை நெருங்கி விட்டது. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களையும் டி.ஆர்.பியில் எதிர்பார்த்த வெற்றியை தராத ஷோவாக இருந்த பிக் பாஸ் சீசன் 5 இப்போது அனைவரும் விரும்பும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது. வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் 50 நாட்களுக்கு பிறகு தான் நடிகர் சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார்.
நடிகர் விஜய்யின் நண்பராகவும் சின்னத்திரை சீரியல் கதாநாயகனாகவும் மானாட மயிலாட நிகழ்ச்சி ஆங்கராகவும் அறியப்படும் சஞ்சீவ் பற்றி ரசிகர்களுக்கு அறிமுகமே தேவையில்லை. அவரின் நடிப்பு, நட்புக்கு அவர் தரும் மரியாதை பற்றியெல்லாம் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். அவரின் காதல் மனைவி பிரீத்தி பற்றியும் குழந்தைகள் பற்றியும் தெரிந்து கொள்ள பிரீத்தியின் யூடியூப் சேனல் உதவியது. இப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில தனக்கென தனி அடையாளம், பெயரை சம்பாதித்து வைத்திருக்கும் சஞ்சீவ் நேற்றைய பிக் பாஸ் ஷோவில் ரசிகர்கள் பலருக்கும் தெரியாத விஷயத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க.. வானத்தை போல சின்ராசுவாக நடிக்க போவது இவர் தான்! வெளியானது முக்கிய அப்டேட்!
பிக் பாஸ் வீட்டில் ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள உதவும் ’கதை சொல்லட்டுமா ’டாஸ்க் நேற்று மீண்டும் சஞ்சீவ் மற்றும் அமீருக்காக அரங்கேற்றப்பட்டது. இதில் சஞ்சீவ் தன்னை பற்றி தன் பின்னால் இருக்கும் சோகத்தை பற்றியும் மனம் விட்டு பேசினார். அதில் அவர் உணர்ச்சி வசப்பட்டு அழுத தருணம் அவரின் அக்கா சிந்துவின் மரணம் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட தருணம். சினிமாவில் சஞ்சீவ் காலடி எடுத்து வைத்தது எதிர்பாராமல் நடந்த சம்பவமெல்லாம் இல்லை. மஞ்சுளா விஜயகுமாரின் சகோதரி ஷியாமளாவின் மகன் தான் சஞ்சீவ். குழந்தை பருவத்தில் இருந்தே மஞ்சுளா, விஜயகுமாருடன் ஷூட்டிங் செல்வது, அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது என இப்படியே இருந்ததால் சஞ்சீவுக்கு சினிமா ஆசை அப்படியே ஒட்டிக் கொண்டது. இந்நிலையில் தான் நிலாவே வா படத்தில் விஜய்யின் நண்பராக நடிக்க வாய்ப்பு வர அப்படியே வெள்ளித்திரையில் சஞ்சீவ் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அதே போல் சஞ்சீவின் அக்கா சிந்து பல படங்களில்,சீரியல்களில் நடித்துள்ளார். அருண்பாண்டியன் மற்றும் ராம்கி நடித்த இணைந்த கைகள் படத்தின் மூலம் அறிமுகமான சிந்து கடைசியாக சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நடித்து இருந்தார். சிந்துவை பற்றி பலருக்கும் தெரியும். அதே போல் சஞ்சீவ் பற்றியும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் இவர்கள் இருவரும் அக்கா தம்பி என்ற உறவு சினிமா வட்டாரங்களில் இருப்பவர்களை விட ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த உண்மை தெரிய வந்தூள்ளது.
இதையும் படிங்க.. போதும் விஜய் டிவி.. ஜீ தமிழ் பக்கம் சென்ற நடிகை! என்ன காரணம்?
அதே போல் சிந்து, 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்காக சின்னத்திரை பிரபலங்கள் நிதி திரட்ட்க் கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆஸ்துமா பிரச்சனையால் மூச்சு திணறி இறந்து விட்டார். அவரின் மகளை சஞ்சீவ் தான் தாயாக நின்று வளர்த்து நன்கு படிக்க வைத்து நல்ல இடத்தில் கல்யாணமும் செய்து வைத்தார். இதற்கு பக்கபலமாக இருந்தது அவரின் மனைவி பிரீத்தி. இவை அனைத்தையும் சஞ்சீவ் நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழுதப்படியே உணர்ச்சியுடன் பதிவு செய்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv