ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல நடிகையின் தம்பியா இவர்? பிக்பாஸ் போட்டியாளர் பற்றி வெளியான தகவல்!

பிரபல நடிகையின் தம்பியா இவர்? பிக்பாஸ் போட்டியாளர் பற்றி வெளியான தகவல்!

பிக் பாஸ் சஞ்சீவ்

பிக் பாஸ் சஞ்சீவ்

நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தாய் - தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துள்ளார்களாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  ஸ்டார் விஜய் டிவி-யில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக்பாஸிற்கு ஈடாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஷோ வேறேதும் இல்லை. அக்டோபர் 3-ம் தேதி முதல் விஜய் டிவி-யில் இசை வாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, நாடியா சாங், பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், அக்‌ஷரா, வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 5.

  வைல்டு என்ட்ரி மூலம் பிரபல கொரியோகிராகஃபர் அமீர், பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ் வெங்கட் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். வைல்டு கார்டு மூலம் பிக்பாஸிற்குள் நுழைந்துள்ள நடிகர் சஞ்சீவ் வெங்கட், சன் டிவி-யில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். முதன் முதலில் மெகாஹிட் சீரியலான மெட்டிஒலியில் நெகட்டிவ் ரோலில் நடித்தன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

  இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை பார்த்து பொறாமை படும் மீனா!

  இவர் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரும் ஆவார். மெட்டிஒலியை தொடர்ந்து நம்பிக்கை, பணம், அண்ணாமலை, ஆனந்தம், அகல்யா, சாரதா, பெண் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தாலும் திருமதி செல்வம் சீரியலில் இவர் நடித்த செல்வம் என்ற கேரக்டர் தான் இவருக்கான அடையாளமாக மாறி போனது.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் அமீர் வாழ்க்கையை மாற்றிய குழந்தைகள்.. காலில் விழும் வீடியோ வைரல்!

  இவரை பற்றிய பல தகவல்கள் வெளிவந்திருந்தாலும் இவரது அக்காவும் திரைப்பட நடிகை என்ற தகவல் பலருக்கும் தெரியாதது. ஆம் திரைப்பட நடிகை மறைந்த சிந்து தான் இவரது சகோதரி ஆவார். இவரும் மெட்டிஒலி சீரியலில் ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். இணைந்த கைகள், பாட்டாளி மகன், பிஸ்தா, சூர்யவம்சம், கிரி, ஜனா, ஐயா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை சிந்து.

  கடந்த 2005-ல் சுனாமி நிதி திரட்டும் போது உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மறைந்த நடிகை சிந்துவிற்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தாய் - தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துள்ளார்களாம்.

  அன்பறிவு திரைப்பட டைரக்டரை தான் தனது அக்கா பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் நடிகர் சஞ்சீவ். மறைந்த நடிகை சிந்துவும், சஞ்சீவும் அக்கா - தம்பி என்ற தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இத்தனை நாளாக இது தெரியாமல் போய்விட்டதே என்று யோசித்து வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv