முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக் பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்.. இந்த வாரம் வெளியேற போவது இவரா?

பிக் பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்.. இந்த வாரம் வெளியேற போவது இவரா?

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்?

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக் பாஸ் சீசன் 6 ல் இந்த வார எவிக்‌ஷனில் கடைசி 2 இடங்களை பிடித்திருக்கும் போட்டியாளர்கள் யார் தெரியுமா? இந்த வாரம் வீட்டை விட்டு இவர்களில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 6 கடந்த மாதம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 30 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. மற்ற எல்லா சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் சண்டைக்கு பஞ்சமில்லை. தினமும் சண்டை, பஞ்சாயத்து,காரசார விவாதம் தான். 21 போட்டியாளர்கள் உடன் ஆரம்பமான இந்த பயணத்தில் இப்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர். வித்தியாசமான டாஸ்க், சேலன்ஞ் என பிக் பாஸ் சீசன் 6 களைக்கட்டுகிறது. ஆரம்பத்தில் விக்ரமன், அசீம் போன்ற போட்டியாளர்கள் பெரிதும் கவனம் ஈர்க்கவில்லை. அசீம்மை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி.. சாட்சி கையெழுத்து போட்ட சீரியல் நடிகர்!

ஆனால் போன வாரத்தில் இருந்து கதையே தலைகீழானது. விக்ரமனன் டைட்டில் வின்னர் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. அதே போல் அசீம்மையும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்? என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது. இந்த வார எவிக்‌ஷன் லிஸ்டில் அசீம், விக்ரமனன், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ADK ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இணையத்தில் வெளியான தகவலின் படி அசீம் அதிக  வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 2வது இடத்தில் விக்ரமனன் இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக ADK முன்னிலை வகிக்கிறார். கடைசி 2 இடத்தில் ராம் மற்றும் மகேஸ்வரி இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மகேஸ்வரி  டாஸ்கில் ஆர்வம் காட்டுகிறார் ஆனால் ராம் அப்படியில்லை அதனால் அவர் வெளியேறினால் கேம் இன்னும் சூடுப்பிடிக்கும் என தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv