விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 79 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட காரணங்களுக்கான நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனிடையே முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை தந்தார். இவரை தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். ஆனால் அபிஷேக் ராஜா வந்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, வருண், அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் பிரியங்கா, வருண், நிரூப், அக்ஷரா, பாவ்னி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
இதையும் படிங்க.. சின்னத்திரையில் புயலை கிளப்பிய விஜய் டிவி கல்யாணி மீண்டும் ரீஎன்ட்ரி!
இவர்களில் குறைந்த வாக்குகள் பெரும் நபர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்பதால் இந்தவாரம் எலிமினேட் ஆகப்போவது யார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஒரு சிலர் நாமினேஷன் குறித்து வாக்குகள் நடத்தி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். எனினும் இந்த முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் முடிவை ஒத்திருக்கும் என்பதால் இந்த வாக்கெடுப்புகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் முதலில் பாவ்னி குறைந்த வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தற்போது அவர் முன்னேறியுள்ளார்.
அவரை தொடர்ந்து வருண் கடைசி இடத்தில் இருந்த நிலையில் தற்போது இன்றைய நிலவரப்படி நிரூப் கடைசி இடத்தில் இருக்கிறார். பிரியங்கா வழக்கம் போல முதல் இடத்தில் உள்ளார். சிபி இரண்டாவது இடத்திலும், பாவ்னி மூன்றாவது இடத்திலும், அக்ஷ்ரா நான்காவது இடத்திலும், வருண் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் இருந்து வரும் நிரூப், பெரும்பாலான வாரங்களில் கடைசியாக தான் காப்பாற்றப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க.. வானத்தை போல சின்ராசுவாக நடிக்க போவது இவர் தான்! வெளியானது முக்கிய அப்டேட்!
இதனால் தனக்கு நாமினேஷன் குறித்து பயமாக இருப்பதாக கூறி, கடந்த வாரம் நடைபெற்ற பிக் பாஸ் ரேஸ் டாஸ்கில் வெற்றி பெற்றார். இதனால் கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து எஸ்கேப்பான நிரூப் இந்த வாரம் தப்பிக்க முடியவில்லை. இதனால் இந்த வாரம் நிரூப் வெளியேறுவாரா அல்லது இன்னும் இரண்டு நாட்கள் வாக்குகள் அளிக்க இருப்பதால் இதில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv