ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டில் ஒரு கருப்பு ஆடு.. இன்று உண்மையை சொல்வாரா கமல்?

பிக்பாஸ் வீட்டில் ஒரு கருப்பு ஆடு.. இன்று உண்மையை சொல்வாரா கமல்?

பிக் பாஸ்

பிக் பாஸ்

bigg boss : நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கும் யார் அந்த ஆடு என கண்டுப்பிடிக்க முடியவில்லை.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை பார்த்து கேட்க துடிக்கும் கேள்வி.. ”இன்னும் எங்கள பைத்தியகாரங்களாவே நினைச்சிட்டு இருக்கீங்களா?: என்பது தான். முந்தைய நாள் எபிசோடை பார்த்த பிக் பாஸ் உயிர் ரசிகர்கள் பாவனியா? ராஜூவா? , #westandwithpavani, ரெட் கார்டு கொடுக்க, ஆணாதிக்கம் இப்படியெல்லாம் இணையத்தில் உருட்டி கொண்டிருந்தார்கள். ஆனால் நேற்றைய எபிசோட் ”மாமா பிஸ்கோத்து பிம்பிலிக்கா பிலாப்பி” கதையானது. சமாதானம் ஆவது நல்லது தான் ஆனா இப்படி ஓவார சாமாதானம் ஆனது நம்ப முடியாத மாற்றமா இருக்கிறது. இந்த வாரம் கமலுக்கே டஃப் கொடுத்துவிட்டார்கள் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ். அவருக்கே இப்ப சந்தேகம் வந்து இருக்கும் இவங்கள நம்பி பேசலாமா? இல்ல வழக்கம் போல் கண்டுக்காமா பிரியங்காவை வச்சி செஞ்சிட்டு, தாமரையை பாராட்டின்னு கம்பி கட்டலாமான்னு. நேற்றைய எபிசோடில் நடந்தவை.

அரசியல் கட்சி இரவு முழுவது தொடர, பாவனி தனியாக பெட்ரூமில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தார். பிரியங்கா அவரை சமாதானம் செய்து :ஏன் இப்படி அழுவுற, தைரியமா பேசு, இனிமே அபினய்யுடன் என்னை சேர்த்து வச்சி பேசாதீங்கன்னு வார்னிங் கொடு”என்றார். அதற்கு பாவனி ”இல்ல பேச சொல்லபோறேன், நாங்க அப்படி தான் நடந்துப்போல் என்ன வேணா பேசிக்கோங்கன்னு சொல்ல போறேன்”ன்னு பல்டி அடிக்க, வாடி ராசாத்தி இதுதான் எனக்கு வேணும்ன்னு வழி அனுப்பி வைத்தார் பிரியங்கா. கோபம் கலந்த அழுகையில் இருந்த பாவனி நேரா ராஜூவிடம் போய் என்ன வேணும் உனக்கு? நீ யாரு? நான் அவன் கூட எப்படி வேணா பேசுவேன், நீ யாரு என் அண்ணனா, அப்பாவா? என கத்த, பதிலுக்கு கவுண்டர் ராஜூ ஹவுஸ்மேட் என்றார். பிரியங்கா மறுபடியும் வந்து அவளோட பர்சன்ல் பத்தி நீ ஏன் பேசுறன்னு கொளுத்தி போட, சிபியும் உள்ளே வந்தார்.

வீட்டில் நடப்பது அவரின் பர்சனல் கிடையாது. எல்லா பக்கமும் கேமரா இருக்கு, நாங்களும் இருக்கோம் எங்க கண்ணுல பட்டத கமெண்ட் பண்ணோம். இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல லவ் இல்லை, ஃபிரண்ட்ஷிப் இல்லை, அப்படின்னு நான் சொன்னேன். அதாற்கு அடுத்த உறவு என்ன வேணா இருக்கலாம் நீங்க தப்பா எடுத்துக்குறீங்கன்னு சொல்ல பிரியங்காவும் பாவனியும் கத்த ஆரம்பித்தனர். கடைசி வரை இதில் பாவனி, என்ன பார்த்தீங்க எங்க ரெண்டு பேரையும் அப்படின்னு கேட்ட கேள்விக்கு ராஜூவிடம் இருந்து பதில் இல்லை. அபினய் பம்மி வாசித்தது அமீருக்கு கடுப்பானது. ஆனால் அபினய் தரப்பில் இருந்து பார்க்கும் போது ஊரு ஆயிரம் பேசும், அதுக்கு ஊர்ல இருக்குற எல்லோரிடமும் போய் விளக்கம் சொல்ல முடியாது, என மனதில் அழுக்கு இல்லை என்றார். அப்படி இப்படி பேசி, கடைசியில் ராஜூ இனி பாவனி விஷயம் குறித்து பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தார். இந்த களேபரம் ஒருபக்கம் நடக்க, வருண், தாமரை, அக்‌ஷரா, அண்ணாச்சி ஓவியக்கலையை தட்டில் தீட்டி கொண்டிருந்தனர். ஆனால் அண்ணாச்சிக்கு காது இங்க தான் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து இரவு டின்னர் சாப்பிட்டனர். இந்த இடத்தில் தான் அந்த பொன்னான காட்சி. பாவனி எல்லா கஷ்டத்தையும் தூக்கி போட்டு ராஜூ, சிபி, நிரூப் என வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கட்டிப்பிடி வைத்தியத்தை பரப்பினார். பிக் பாஸ் சீசன் 5ல் பெஸ்ட் புரமோ என அவார்டு கொடுக்கப்பட்ட புரமோவில் இடம்பெற்ற காட்சிகள் இவைதான். புரமோவை பார்த்து கண்ணீர் விட்ட பலருக்கும் லைவ் அவ்வளவு டச்சிங்காக இல்லை. இந்த பெருமைக்கெல்லாம் சொந்தக்காரர் பிக் பாஸ் புரமோ எடிட்டர் தான்.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இந்த காட்சிகள் அரங்கேறும் போது அந்த இடத்தில், தாமரை, பிரியங்கா இல்லை. பொழுது விடிகிறது. ஹவுஸ்மேட்ஸ் தங்களது அன்றாட பணிகளை தொடர்கின்றனர். சொல்லிவச்சது போலவே பிரியங்காவும் தாமரை சமரசம் பேசுகிறார்கள். வருணுக்கு இதை பார்த்ததும் சந்தேகம் வர, கூட்டணிக்காக தான் இந்த சமரசம் என ராஜூவின் காதில் கடிக்கிறார். கடைசியில் ராஜூ வந்து மொத்த ஆட்டத்தையும் கலைத்து போட்டார்.

கார்டன் ஏரியாவில் இருந்த உரக்கசொல் கட்சியின் அமீர், பாவனி வழக்கம் போல் அடித்து விளையாட அபினய் காண்டாகினார். இந்த கோபத்தை அமீரிடம் வேறு விதத்தில் வெளிப்படுத்தினார். அபினய் இந்த பாய் பெஸ்டி தொல்லை இதுதான் போல. கொஞ்ச நேரத்திற்கு பிரியங்காவை ஆளே பார்க்க முடியவில்ல. கத்தி, கத்தி தொண்டை போனதால் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் போல. கட்சி ஆபீசிலும் அவரை பார்க்க முடியவில்லை.

இந்த கேப்பில் ராஜூ, உரக்க சொல் கட்சியின் கொள்கைகளை பற்றி கேட்டார். இறுதிக்கட்ட் தேர்தல் பிரச்சாரத்தில் அக்‌ஷராவின் மட்டன் சண்டையை சஞ்சீவ் நக்கலாக பேசி அமைதிப்படுத்தினார். இந்த டாஸ்கில் அசல் பிரியாணி தொண்டன் போல் நடந்து கொள்வது அக்‌ஷரா தான் . டாஸ்கின் இறுதிக்கட்டம் தேர்தல் வாக்குப்பதிவு. தேர்தல் ஆணைய அதிகாரிகளாக நிரூப், அமீர் நியமிக்கப்பட அமைதியான முறையில் தேர்தல் நடைப்பெற்றது.

ஓட்டு எண்ணிக்கையில் தான் மிகப் பெரிய ட்விஸ்ட். அண்ணாச்சி கட்சி 7 ஓட்டுகள் வாங்க, உரக்க சொல் கட்சி 5 ஓட்டுகள் பெற்று இருந்தது. கூட்டணி வைத்த 8 பேரும் அந்த கட்சிக்கு ஓட்டு போட்டு இருந்தால் பிரியங்கா கட்சி 4 ஓட்டுகள் தான் பெற்று இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் கருப்பு ஆடாக செயல்பட்டு பிரியங்கா கட்சிக்கு ஒரு ஓட்டு போட்டுள்ளனர். இதனால் அண்ணாச்சியின் முகம் மாறியது. டாஸ்கில் ஜெயித்தாலும் அண்ணாச்சிக்கு இதை ஏற்றுகொள்ள முடியவில்லை. யாரு அந்த கருப்பு ஆடு? அவரின் மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது. வருணுக்கு நிரூப் மீது சந்தேகம் போனது. ஆனால் நிரூப் இல்லவே இல்லை என்றார். எல்லோரிடமும் தாய் நாடு, இந்தியா, குடும்பம், தாய் தந்தையர் மீது சத்தியம் வாங்கப்பட்டது. எல்லோரும் அவர்கள் சார்ந்த கட்சிக்கே ஒட்டு போட்டதாக ஒப்பித்தார்கள். அப்படியென்றால் யார் அந்த கருப்பு ஆடு?

ராஜூ மீதும் ஹவுஸ்மேட்ஸூக்கு சந்தேகம் வந்தது. ஆனால் சத்தியத்தை ஆரம்பித்து வைத்ததே அவர் தான். நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கும் யார் அந்த ஆடு என கண்டுப்பிடிக்க முடியவில்லை. தாமரைக்கு யாரு அந்த துரோகின்னு தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம். அதற்கு அக்‌ஷராவும், வருணும் தக்க பதில் கொடுத்தனர். தாமரைக்கு புரியும்படி வருண், நிஜ அரசியல் தலைவர்களையே எடுத்துக்காட்டாக சொன்னார். இன்றைய கமல் எபிசோடிலாவது கருப்பு ஆடு யாருன்னு தெரிய வருமான்னு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5, Vijay tv