பிக் பாஸ் சீசன் 3 பிரபலமும், காமெடி நடிகையுமான ஜாங்கிரி மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை என பெயர் வாங்கியவர்கள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே. மனோரமா, கோவை சரளா வரிசையில் காமெடி ரோலில் வெள்ளித்திரையில் தேவதர்ஷினி, ஜாங்கிரி மதுமிதா போன்ற நடிகைகள் இப்போது கொட்டிக்கட்டி பறந்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் ஜாங்கிரி மதுமிதா பற்றி கூற வேண்டும் என்றால் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்திற்கு அடுத்தப்படியாக ரசிகர்கள் கைத்தட்டி ரசித்தது மதுமிதாவை தான். அடுத்தடுத்து ‘சுமார் மூஞ்சி குமாரு’, ‘டிமாண்டி காலனி’ என திரைக்கதையுடன் ஒன்றிய காமெடி கதாபாத்திரங்களில் கலக்கினார்.
இதையும் படிங்க.. அந்த சம்பவத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்தவர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
அந்த நேரத்தில் தான் பிக் பாஸ் வாய்ப்பு அவரை தேடி சென்றது. பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக களம் இறங்கினார். ஆரம்பம் முதலே ஃபுல் என்ர்ஜியுடன் விளையாடிய மது, ஏகப்பட்ட சர்ச்சையிலும் சிக்கினார்.வனிதா, சாண்டி மாஸ்டருடன் சண்டை என பிக் பாஸ் எபிசோடுகள் மதுமிதாவால் சூடுப்பிடித்தன. அவருக்கு ஆதரவாக ஆர்மிகளும் உருவாகின. இந்த நேரத்தில் தான் பிக் பாஸ் வீட்டில் அரங்கேறி டாஸ்கில் மதுமிதா அரசியல் தொடர்பான கருத்து சொல்ல, அது பெரிதாக வெடிக்க மாதுமிதாவுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும், பிக் பாஸ் குழுவுக்கு சண்டை வெடிக்க பாதியிலேயே மது வெளியேறினார்.
அந்த சம்பவத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்தவர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான 'அனேபெல் சேதுபதி’ திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.இந்நிலையில் மதுமிதாவுக்கு நேற்று முன் தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே இவரின் வளைக்காப்பு மேக்கப் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.