Home /News /entertainment /

பிக் பாஸ் 5 பிரபலத்தை பாடாய்படுத்தும் விவாகரத்து சர்ச்சை!

பிக் பாஸ் 5 பிரபலத்தை பாடாய்படுத்தும் விவாகரத்து சர்ச்சை!

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் அபிநய் மனைவி, “விவாகரத்து ஆகும் போது பெண்களுக்கும் ஜீவனாம்சம் தரும் நிலை வர வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

  பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலமான அபிநய் வாடி மற்றும் அவரின் மனைவி அபர்ணாவை விவாகரத்து சர்ச்சை விடாமல் துரத்துகிறது. இந்த நேரத்தில் தான் அபிநய்யின் மனைவி அபர்ணா தன்னுடைய இன்ஸ்கிராமில் ஜீவனாம்சம் பற்றி போஸ்ட் போட்டு பகீர் கிளப்பியுள்ளார்.

  பிக் பாஸ் சீசன் 5 இனிதே முடிவு அடைந்தாலும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்த தேடல் குறைந்த பாடில்லை. பிக் பாஸ் 5 முடிந்து, பிக் பாஸ் அல்டிமேட் தொடங்கி, அதுவும் முடிந்து விட்டது. ஆனாலும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பற்றி தினமும் ஒரு அப்டேட் இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக ட்ரெண்டிங்கில் இருப்பது அபிநய் மற்றும் அவரின் மனைவி அபர்ணா குறித்த பேச்சு தான். ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரனான அபிநய் பிக் பாஸ் சீசன் 5ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

  மாமியார் மல்லிகா கொடுத்த ஷாக்கில் கார்த்திக் ...சுந்தரி சீரியலில் அடுத்து என்ன நடக்கும்?

  பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே பாவ்னி - அபிநய் நல்ல நண்பர்களாக இருந்தனர். இதனிடையே அபிநய் தன்னை காதலிப்பதாக சந்தேகித்த பாவ்னி, அவரிடமே இதுகுறித்து நேரடியாகவே கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த அபிநய், அப்படி எதுவும் இல்லை நமக்குள் நல்ல நட்பு மட்டும் இருப்பதாக கூறியதையடுத்து பின்னர் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நேரத்தில் தான், ட்ரூத் அண்ட் டேர் கேமில் அபிநயிடம், நீ பாவ்னியை லவ் பண்றியா? என அனைவரின் முன்னிலையிலும் ஓப்பனாக ராஜூ கேட்க, அது பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் வெளியிலும் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. கமல் பஞ்சாயத்து செய்து வைத்தார். வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் இதில் இருக்கும் பிரச்னையை பாவ்னிக்கு உணர்த்தினார். அதன் பின்பு பாவ்னி அபிநய்யை விட்டு தூரமாகவே இருந்தார்.

  KRK movie : லவ் பண்ணும் போதே நயனிடம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’கதையை சொன்ன விக்கி!

  அடுத்த 2 வாரத்தில் அபிநய் எவிக்ட் செய்யப்பட்டார். இப்படி இருக்கையில் திடீரென்று அபிநய்யின் மனைவி இன்ஸ்டாகிராமில் தன்னுடன் சேர்ந்து இருந்த கணவரின் பெயரை நீக்கினார். அப்போதே ரசிகர்கள்,  இது விவாகரத்து விஷயம் தான என வதந்தியை பரப்பினார்கள். ஆனால்  கடைசியில் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. அபிநய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அபர்ணா இருந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை முடித்து வைத்தது.
  இந்நிலையில் தற்போது மீண்டும் அபர்ணா, இன்ஸ்டாவில் ஒரு போஸ்டை ஷேர் செய்து பகீர் கிளப்பியுள்ளார். அதாவது, விவாகரத்து ஆகும் போது பெண்களுக்கும் ஜீவனாம்சம் தரும் நிலை வர வேண்டும். அது தான் உண்மையான gender equality என குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் நீங்கள் விவாகரத்து புராஸசில் இருக்கீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமில்லை ஒருசிலர், சீக்கிரமாக அபிநய்யை விவாகரத்து செய்யுங்கள் அதுதான் நல்லது என்றும் கமெண்ட் செய்துள்ளனர். அபர்ணா போஸ்டின் காரணம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vijay tv

  அடுத்த செய்தி