Home /News /entertainment /

BIGG BOSS : சிம்புக்கு மிகவும் பிடித்தமான நபர் வைல்டு கார்டு என்ட்ரி! ரசிகர்கள் ஹாப்பி

BIGG BOSS : சிம்புக்கு மிகவும் பிடித்தமான நபர் வைல்டு கார்டு என்ட்ரி! ரசிகர்கள் ஹாப்பி

பிக் பாஸ்

பிக் பாஸ்

BIGG BOSS tamil : வைல்டு கார்டு என்ட்ரியாக் டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

    பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வருகிறார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. சிம்புவின் நெருங்கிய நண்பரும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஆல் டைம் ஃபேவரெட் போட்டியாளரான சாண்டியின் வருகை மொத்த ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

    ஓடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு நாளுக்கு நாள் பீக் அதிகமாகி கொண்டே செல்கிறது. . இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருப்பதால்மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த போதே பிக் பாஸ் அல்டிமேட் குறித்த அறிவிப்பு வெளியானது. இதை 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே போல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் வித்யாசமாக புரமோ மூலம் அறிவிக்கப்பட்டன.

    BB ultimate : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்!

    சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டனர். இதுவரை சுரேஷ் தாத்தா, சுஜா, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் , அனிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மற்றும் சுரேஷ் தாத்தா வாக் அவுட் செய்தனர். சுரேஷ் தாத்தாவுக்கு மட்டும் பிக் பாஸ் 2வது வாய்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. முதன் முறை மக்கள் ஓட்டு எண்ணிக்கையை வைத்து  வெளியே போனவர், மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தார். ஆனால் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நேற்று ஷோவில் இருந்து வெளியேறினார்.

    காதலிக்கு அண்ணனுடன் திருமணம்.. ஒரு வழியா ஈரமான ரோஜாவே சீரியல் கதை தொடங்கியது!

    நேற்றைய தினம் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக விஜய் டிவி kpy புகழ் தீனா வைல்டு கார்டு என் ட்ரி கொடுத்தார். இந்த வியப்பில் இருந்தே ரசிகர்கள் இன்னும் வெளிவாரத நிலையில் அடுத்த வைல்டு கார்டு என்ட்ரியாக் டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இவரின் என்ட்ரி புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    பிக் பாஸ் சீசன் 3 ல் ஒரு கலக்கு கலக்கியா சாண்டியின் என்ட்ரியை போட்டியாளர்களும் கொண்டாடுகின்றனர். இவரின் குருநாதா காமெடியை இனி பிக் பாஸ் அல்டிமேட்டிலும் நிச்சய்ம் எதிர்பார்க்கலாம். சிம்புக்கு சாண்டி நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 3, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி