தமிழில் வித்தியாசமான கான்செப்ட் உடன் விஜய் டி.வி. அறிமுகப்படுத்தியுள்ள ஷோ ‘பிக்பாஸ் அல்டிமேட்’. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் அப்-பில் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ 24 x 7 ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கடைசியாக முடிந்த 5வது சீசன் வரை பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பத்தில் போர் அடிப்பதாக கமெண்ட்கள் எழுந்தாலும், தற்போது அனல் பறக்க ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருகிறது. இப்போது கோபம், வன்மம், ஒருவரை ஒருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொள்வது என போட்டியாளர்களிடையே உச்சகட்ட மோதல் வெடித்து வருகிறது. முந்தைய சீசன்களில் தங்கள் மீது விழுந்த பார்வையை திசை திருப்ப வேண்டுமென போட்டியாளர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
இதில் அனிதா சம்பத் பெயர் கடந்த முறை ரொம்பவே ரிப்பேர் ஆனது. செய்தி வாசிப்பாளராக தோன்றிய அனிதாவை ஆஹா... ஓஹோ.... என புகழ்ந்த ரசிகர்கள் எல்லாரும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவருடைய உண்மையான முகத்தை பார்த்து மிரண்டு போனார்கள். எதற்கு எடுத்தாலும் அழுவது, கத்துவது என தேவையில்லாமல் பெயரைக் கெடுத்துக்கொண்டார். தற்போது அந்த மாதிரி எதுவும் நடக்கூடாது என அனிதா கவனமாக இருந்தாலும், அவ்வப்போது அவருடைய கணக்கு தப்பாகிவிடுகிறது.
சமீப காலமாகவே பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் அனிதா சம்பத் - பாலாஜி இடையே பனிப்போர் வெடித்துள்ளது. அனிதா தான் பாலாஜியை டார்கெட் செய்வதாகவும், பாலாஜி தான் பழைய பகையை தீர்க்க அனிதாவை வச்சி செய்வதாகவும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அனிதா சம்பத், நிரூப்பிடம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது சோசியல் மீடியாவில் சர்ச்சையை உருவாக்கியது.
இதையும் படிங்க.. விஜய் டிவி ’தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் வரப்போகும் முக்கிய மாற்றம்!
போதாக்குறைக்கு கடந்த வாரம் சிம்புவையே வம்பிழுத்து நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் அனிதா.
கமல் ஹாசன் சினிமா, அரசியல் என பிசியாக இருப்பதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகினார். இதனையடுத்து சிம்பு அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டிருந்த அனிதா, “நீ பேசுனது நல்ல ஆழமான விஷயம், இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் யோசிக்கமாட்டாரு. கமல் சார் 5 சீசனை பார்த்து இருக்காரு. சிம்பு இந்த ஷோவுக்கு புதுசு” அப்படின்னு பேசியிருந்தாங்க. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, சிம்பு ரசிகர்கள் அனிதாவை வச்சி செஞ்சிட்டு இருக்காங்க.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஷோவை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, அனைவரும் எதிர்பார்த்தது போலவே அனிதாவிற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். "எனக்கு எதுவும் தெரியாது, பிக் பாஸ் ஆழம் புரியாது என ஒருவர் பேசியதை கேட்டேன். அது என்ன ஆழம் என சொன்னீங்க என்றால் இறங்கி பார்த்துவிடுவேன்" என சிம்பு ஆவேசமாக கேட்டார்.
சிம்புவின் இந்த கேள்வியால் திகைத்துப்போன அனிதா, நான் அப்படியெல்லாம் பேசவே இல்லை என்றும், அப்படி சொன்னதாக நினைவில்லை, ஒருவேளை சொல்லியிருந்தாலும் உங்களைப் பற்றி பாசிட்டிவாக தான் பேசியிருப்பேன் எனக்கூறி மழுப்பினார். அடுத்ததாக பாலாஜி முருகதாஸிடம் சென்ற சிம்பு அவர் அழுதது குறித்து பேசினார்
சிம்பு ரப் அண்ட் டப்பான ஆளு, மனசுல பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார் என எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனால் அதனால் நான் அனுபவிக்கிற கஷ்டம் எனக்கு தான் தெரியும். அந்த அழுகை பார்க்கும்போது அது நான் அழுததை நினைவுபடுத்தியது என உருக்கமாக பேசினார். பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ச்சை நாயகியாக வலம் வந்த அனிதா எலிமினேட் ஆகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anitha sampath, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Simbu, Vijay tv