ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா?

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா?

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

விக்ரமனன் அதிக வாக்குகள் எடுத்து முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக் பாஸ் வீட்டில் குறைவான வாக்குகள் பெற்று கடைசி 2 இடங்களை பெற்று இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

    பிக் பாஸ் தமிழ் சீசன் 6 தொடங்கி 3 வாரங்கள் கடந்து விட்டன. ஆரம்பத்தில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படாத போட்டியாளர் விக்ரமனன் இப்போது  பலரின் ஃபேவரெட்டாக மாறியுள்ளார். அதே போல் அசீம் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் போன வார குறும்படத்திற்கு பிறகு அவரின் நடவடிக்கையில் பேச்சில் பல மாற்றங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே போல் போன வாரம் கமல்ஹாசன் உட்பட ரசிகர்கள் அனைவரும் பாராட்டிய தனலட்சுமி இந்த வாரம் முழுக்க நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்ட பிக் பாஸ் ஜி.பி முத்து!

    அதுமட்டுமில்லை இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேற போவது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எவிக்‌ஷன் லிஸ்டில் அசீம், விக்ரமனன், ஆயிஷா, செரினா ஆகியோர் உள்ளனர். இதில் விக்ரமனன் அதிக வாக்குகள் எடுத்து முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் போன வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கில் கீழே விழுந்து வீட்டில் களேபேரம் நடக்க காரணமான செரினா, கமலை எதிர்த்து பேசி சர்ச்சையில் சிக்கிய ஆயிஷா இவர்கள் இருவரும் டேன்ஞர் லிஸ்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஆயிஷா அல்லது செரினா இருவரில் ஒருவர் வெளியேறலாம் என செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.  இவர்கள் இருவருமே பயங்கர க்ளோஸ் ஃபிரண்ட்ஸாக பிக் பாஸ் வீட்டில் உலா வருகின்றனர். அதுமட்டுமில்லை  ரசிகர்களின் கோரிக்கைப்படி தனலட்சுமிக்கு கமல்ஹாசன் அட்வைஸ் செய்வார் என்றும் மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி, மணிக்கண்டனுக்கு வார்னிங் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv