ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எல்லாருக்கும் ஜால்ரா அடிக்கிறாரு... ஜிபி முத்துவ பாத்தாலே காண்டாகுது - பிக்பாஸில் புலம்பும் தனலட்சுமி

எல்லாருக்கும் ஜால்ரா அடிக்கிறாரு... ஜிபி முத்துவ பாத்தாலே காண்டாகுது - பிக்பாஸில் புலம்பும் தனலட்சுமி

சரண்யா மற்றும் ஜிபி முத்து

சரண்யா மற்றும் ஜிபி முத்து

இன்று வெளியான மூன்றாவது புரோமோ வீடியோவில், ஜிபி முத்துவுடன் மற்ற ஹவுஸ்மெட்கள் இணைந்து சாம்பார் எப்படி வேணும் என்று கேட்டுக்கொண்டு விளையாடி சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எல்லாருக்கும் ஜால்ரா அடிக்கிறாரு அவரு, ஜிபி முத்துவ பாத்தாலே காண்டாகுது என்று பிக்பாஸில் தனலட்சுமி புலம்பும் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோ வீடியோவில், ஜிபி முத்துவுடன் மற்ற ஹவுஸ்மெட்கள் இணைந்து சாம்பார் எப்படி வேணும் என்று கேட்டுக்கொண்டு விளையாடி சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் தனலட்சுமி கேமராவைப் பார்த்து எனக்கு ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது, அவர் எல்லாருக்கும் ஜால்ரா போட்டுகிட்டு டீமில் உள்ள மற்றவர்களும் ஜால்ரா போடவேண்டும் என்று எதிர்பார்கிறார் என கடுப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்.

Also read... தீபாவளி ரேஸில் 'சர்தார்'.. 'பிரின்ஸ்'! அதிகாலை ஷோவுக்கு ப்ளான்! அரசுக்கு பறந்த கோரிக்கை

அது எதுவும் காதில் கேட்காத ஜிபி முத்து ஃப்ளவர் வாஸ் தலையில் வைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கும் வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6