ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிரிச்சிக்கிட்டே உள்ள வந்தாங்க... இப்போ அழுதுகிட்டே இருக்காங்க - பிக்பாஸில் கார்னர் செய்யப்படுகிறாரா ஆயிஷா?

சிரிச்சிக்கிட்டே உள்ள வந்தாங்க... இப்போ அழுதுகிட்டே இருக்காங்க - பிக்பாஸில் கார்னர் செய்யப்படுகிறாரா ஆயிஷா?

ஆயிஷா

ஆயிஷா

நேற்று ஆக்டிவிட்டி ஏறியாவில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இங்கு உள்ள போட்டியாளர்களிடையே யாரிடம் நட்பு பாராட்ட விரும்புகிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்க ஒருவர் பின் ஒருவராக வந்து யாரிடம் நட்பு வேண்டும் எதற்காக அந்த நட்பு வேண்டும் என்று விளக்கினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் வீட்டில் கார்னர் செய்யப்படுகிறாரா ஆயிஷா, மூன்றாவது நாளான இன்று முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று ஆக்டிவிட்டி ஏறியாவில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இங்கு உள்ள போட்டியாளர்களிடையே யாரிடம் நட்பு பாராட்ட விரும்புகிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்க ஒருவர் பின் ஒருவராக வந்து யாரிடம் நட்பு வேண்டும் எதற்காக அந்த நட்பு வேண்டும் என்று விளக்கினர்.

Also read... திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் கதை!? சேலத்து பையனாகும் சிவகார்த்திகேயன்.. பரவும் தகவல்!

அவர்களை தொடர்ந்து அசல் வந்து ஆயிசாவிடம் நட்பு குறித்து பேசும் போது என்னை வாடா, போடா என்று பேசாதை எனக் கூறினார். அதனை தொடர்ந்து இனி நான் உங்களை வாங்க போங்க என்றே கூறுகிறேன் என ஆயிசா அசலிடம் தெரிவித்தார். பின் அந்த டாஸ்க் முடிந்து வெளியே வந்ததும் ஆயிசா தனியாக அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று 3-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜனனி பேசுகையில் எனக்கும் ஆயிசாவிற்கு சண்டை வந்துவிடுமோ என்று தோன்றிகிறது எனக் கூற, ஆயிசா நான் உன்னை அப்படி நினைக்கல என்று கூறுகிறார். அப்போது மகேஷ்வரி நீங்க பேசவேண்டாம் இப்போது என ஆயிஷாவிடம் கூற, நான் எப்படினு நான் சொல்லகூட கூடாதா சாரி விடுங்க நான் சொல்லலை என்று அழுகிறார் ஆயிஷா. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6