ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டில் நேத்து டீ சண்டை... இன்னைக்கு சாம்பார் சண்டையா! - வெளியானது கலேபர ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டில் நேத்து டீ சண்டை... இன்னைக்கு சாம்பார் சண்டையா! - வெளியானது கலேபர ப்ரோமோ!

மகேஷ்வரி மற்றும் தனலட்சுமி

மகேஷ்வரி மற்றும் தனலட்சுமி

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் வீட்டில் நேத்து டீ-க்கு சண்டை, இன்னைக்கு சாம்பார்க்கு சண்டையா? மூன்றாவது நாளான இன்று இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோ வீடியோவில், கிச்சென் டீமில் உள்ள மகேஷ்வரிக்கும் வெஷல் கிளீனிங் டீமில் உள்ள தனலட்சுமிக்கும் சாம்பார் எப்போ வைப்பது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதே நாங்கள் சாம்பார் வைப்போம் என்று மகேஷ்வரி சொல்ல நீங்க எப்போ வேணும்னாலும் செஞ்சு வைப்பீங்க அத நாங்க சாப்பிடனுமா என்று தனலட்சுமி கேட்க வாக்குவாதம் முற்றியது அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மெட்கள் அவர்களை சமாதானம் செய்கின்றனர்.

Also read... தொடக்கமே மாஸ்! விஜய், மகேஷ் பாபுவை குறி வைக்கும் தோனி!? பக்கா பிளானில் தலயின் தயாரிப்பு நிறுவனம்!

முன்னதாக வெளியான முதல் புரோமோ வீடியோவில், ஜனனி பேசுகையில் எனக்கும் ஆயிசாவிற்கு சண்டை வந்துவிடுமோ என்று தோன்றிகிறது எனக் கூற, ஆயிசா நான் உன்னை அப்படி நினைக்கல என்று கூறுகிறார். அப்போது மகேஷ்வரி நீங்க பேசவேண்டாம் இப்போது என ஆயிஷாவிடம் கூற, நான் எப்படினு நான் சொல்லகூட கூடாதா சாரி விடுங்க நான் சொல்லலை என்று ஆயிஷா அழுதது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6