Home /News /entertainment /

Bigg Boss Tamil 6 : விக்ரம் வெற்றிக்கு பிறகு பிக் பாஸில் கமல்.. வேட்டை வேற மாறி இருக்க போகுது!

Bigg Boss Tamil 6 : விக்ரம் வெற்றிக்கு பிறகு பிக் பாஸில் கமல்.. வேட்டை வேற மாறி இருக்க போகுது!

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

Bigg Boss Tamil 6 kamalhassan : விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 முதல் புரமோவை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வேட்டைக்கு ரெடியா? என விக்ரம் மோடிலே என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ஆம் ரசிகர்கள் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    இந்தியில் இருந்து முதன்` முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழுக்கு கொண்டு வந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கிய பிக் பாஸ் முதல் சீசன்   மக்களிடையே ரீச் ஆனது.  இந்த பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ் வெற்றி வாகை சூடினார். அதனைத் தொடர்ந்து அடுத்தத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பாகின. இதுவரை பிக் பாஸ் 5 சீசன்கள் டெலிகாஸ்ட் ஆகியுள்ளன. கடந்தாண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 5ல் ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்றார்.

    என் க்ரஷ் அவர் தான்.. பிரபல நடிகரை கைகாட்டிய ரம்யா கிருஷ்ணன்!

    மற்ற எல்லா சீசன்களை விடவும் சீசன் 5 குறைந்த டி.ஆர்.பி ரேட்டிங்கை பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு போட்டியாளர்களே காரணம் எனவும்  தெரிய வந்தது. அதாவது மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத  மாடல்கள் அதிகம் கலந்து கொண்டதால் பிக் பாஸ் சீசன் 5 டல் அடித்தது. அதனால் இந்த முறை பிக் பாஸ் 6ல்  நிறைய மாற்றங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. அதே போல் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் கமல் களம் இறங்குகிறார்.

    ராமராஜன் - நளினி விவாகரத்து விஷயத்தில் என் பெயரை சேர்த்தாங்க.. வருத்தப்பட்ட சீரியல் நடிகை!

    முதலில் இந்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என வதந்திகளும் பரவின. ஆனால் கடைசியில் பிக் பாஸ் சீசன் 6 கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ளது புரமோ மூலம் உறுதியாகியுள்ளது. மற்ற எல்லா  சீசனிலும் நடக்காத ஒன்று இந்த சீசனில் அரங்கேறவுள்ளது. அதாவது இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 முதல் புரமோவை வெளியிட்டுள்ளது. கதவை திறந்து கொண்டு சிங்கம் போல் வந்து நிற்கிறார் கமல்.  பின்பு வேட்டைக்கு ரெடியா? என வாட்சை பார்த்து கேட்கிறார். புரமோவை பார்த்த ரசிகர்கள் விக்ரம் வைப் , கமலிடம் இன்னும் இருப்பதாக கூறியுள்ளனர். புரமோ வந்து விட்டது அடுத்து போட்டியாளர்கள் குறித்த விவரங்களும் லீக் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Kamal Haasan, Vijay tv

    அடுத்த செய்தி