ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் யார்? 50 லட்சம் யாருக்கு? வெளியானது தகவல்!

பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் யார்? 50 லட்சம் யாருக்கு? வெளியானது தகவல்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் தற்போது ராஜூ, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகியோர் மீதமுள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவியில் பல தரப்பு மக்களின் ஆதரவை பெற கூடிய நிகழ்ச்சிகள் நிறைய உள்ளன. அதில் தற்போது அதிக பேரால் ரசித்து பார்க்க கூடிய நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் என்று சொல்லலாம். இதுவரை 4 பிக் பாஸ் சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் நடந்து வருகிறது. சுமார் 20 போட்டியாளர்கள் இந்த ஐந்தாம் சீசனில் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் வெளியேறிய நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளனர். இவர்களுக்குள் கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த ஐந்து பேரில் யார் பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் தற்போது ராஜூ, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகியோர் மீதமுள்ளனர். இவர்களுக்குள் பல முனை போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் இதன் டி.ஆர்.பி குறைந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எனவே எங்கு பார்த்தாலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாராக இருப்பார் என்கிற பேச்சு தான் பரவலாக உள்ளது. மேலும் பல்வேறு சமூக ஊடகங்களில் இது ட்ரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி மீண்டும் உயர தொடங்கி உள்ளது. மேலும் இந்த போட்டியில் யார் வெற்றியாளர் என்பதை மக்கள் முன்பே கணிந்திருந்தனர்.

அதன்படி ராஜூ தான் வெற்றியாளர் என்று அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இவருக்கு அடுத்ததாக பிரியங்கா ரன்னர் அப் ஆகியுள்ளார். இவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் ஓட்டுகள் தான் அடிப்படை அம்சமாக இருந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையிலே பல ஓட்டு வித்தியாசங்கள் உள்ளது என தகவல்கள் வந்துள்ளன. ராஜூ ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்ததால் தான் பிக் பாஸ் சீசன் 5ன் வெற்றியாளராக முடிந்தது.

இதையும் படிங்க.. விஜய் டிவி தாமரை செல்விக்கு கொடுத்த சம்பளம் இவ்வளவு தான்! வெளியான ஷாக் தகவல்

அதே போன்று ராஜூவிற்கு மக்கள் ஆதரவு இந்த நிகழ்ச்சியின் மூலம் பெருகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே அவர்களின் வாழ்க்கை பல மடங்கு உயர வாய்ப்பு அதிகம் என்பது நமக்கு தெரிந்தது தான். இந்நிலையில் ராஜூவிற்கு சிறப்பான எதிர்காலம் இதன் மூலம் அமைய உள்ளது.

இதையும் படிங்க.. குடும்பத்துடன் திருப்பதி போன பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. பக்தர்களுக்கு சொன்ன அந்த ரகசிய இடம்!

ஏற்கனவே விஜய் டிவியில் சில சீரியல்களில் ராஜூ நடித்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆன பிறகு பட வாய்ப்புகள் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது. எது எப்படியோ மக்களின் வாக்குகள் தான் என்றும் வெற்றி பெரும் என்பதை ராஜூவின் வெற்றியின் மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv