• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5 : கொளுத்தி போடும் பிக் பாஸ்... பிரியங்கா, அபிஷேக் வான்டட் லிஸ்டில் சேர்க்கப்பட்டனர்!

Bigg Boss Tamil 5 : கொளுத்தி போடும் பிக் பாஸ்... பிரியங்கா, அபிஷேக் வான்டட் லிஸ்டில் சேர்க்கப்பட்டனர்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

கமல்ஹாசன் எபிசோடு முடிந்த மறுநாளிலிருந்து பிரியங்காவின் பேச்சில், நடத்தையில் ஏகப்பட்ட மாற்றங்கள்.

  • Share this:
    பிக் பாஸ் வீட்டில் இன்று ‘விளையாடு வெளியேறு’ டாஸ்க் மூலம் கொளுத்தி வேலையை கச்சியதமாக செய்துள்ளார் பிக் பாஸ். இதில் பிரியங்கா மற்றும் அபிஷேக் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    விஜய் டிவி-யில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டார். தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் உள்ளனர். இதில் குறிப்பாக பாவ்னிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாமினேஷன் லிஸ்டில் வராத ராஜூ பாயுக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர மவுசு. அதிலும் அபிஷேக் மற்றும் பிரியங்காவுக்கு ராஜூ அடிகக்டி நோஸ் கட் கொடுப்பதை ரசிகர்கள் அதிகம் ரசிக்கின்றனர்.

    முதல் 2 வாரம் பிரியங்காவுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. விளையாட்டாக அவர் கொளுத்தி போட்ட சம்பவங்கள் புரமோவில் இடம்பெற்றன. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக, அதாவது போன ஞாயிறு கமல்ஹாசன் எபிசோடு முடிந்த மறுநாளிலிருந்து பிரியங்காவின் பேச்சில், நடத்தையில் ஏகப்பட்ட மாற்றங்கள். அதுமட்டுமில்லை, அபிஷேக், பிரியங்காவை மூளை சலவை செய்வது, குரூப்பிஸம் செய்வது, குழுவாக சேர்ந்து கொண்டு விளையாடுவது, அக்‌ஷராவை அழ வைப்பது என பிரியங்காவின் செயலால் ரசிகர்கள் வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    அபிஷேக் 2.0 வாக மாறிய பிரியங்கா... அப்ப இத்தனை நாள் அத்தனையும் நடிப்பா?

    பிக் பாஸ் சீசனில் குரூப்பிஸம் தலைவியாக பிரியங்கா உருவெடுத்துள்ளார். அதுமட்டுமில்லை பஞ்சந்திரம் டாஸ்கில் பிரியங்கா, அக்‌ஷராவிடம் மோசமாக நடந்து கொண்டது பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாக்யுள்ளது. அதில் ‘விளையாடு வெளியேறு’ டாஸ்க் மூலம் கொளுத்தி வேலையை கச்சியதமாக செய்துள்ளார் பிக் பாஸ்.பிக் பாஸ் வீட்டில் யார் சரியாக விளையாடுகின்றனர்? யார் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்? யார் விதிமுறைகளை மீறுகின்றனர் ?என ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு பெயர்களை பேப்பரில் குறிப்பிடுகின்றனர்.



    இந்த டாஸ்கில் அதிகம், பிரியங்கா, நிரூப், அபிஷேக் பெயர்கள் இடம் பெருகின்றனர். மோஸ்ட் வான்டட் லிஸ்டில் பிரியங்காவையும் அபிஷேக்கையும் ஹவுஸ்மேட்ஸ் சேர்த்துள்ளனர். இந்த டாஸ்கை வைத்து கண்டிப்பாக வீட்டில் அடுத்த சண்டை நடக்கப்போவது உறுதியாகிவிட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: