• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • bigg boss tamil 5 : மோதிக்கொள்ளும் நிரூப், அபிஷேக், பிரியங்கா - உடைகிறதா மினி அன்பு குரூப்?

bigg boss tamil 5 : மோதிக்கொள்ளும் நிரூப், அபிஷேக், பிரியங்கா - உடைகிறதா மினி அன்பு குரூப்?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் குறித்து கூற வேண்டும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது

  • Share this:
    பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோவில், இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் குறித்து கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது

    பிக் பாஸ் சீசன் 5,  சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. மேலும் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை முதல் பஞ்சதந்திரம் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களை நிறைவு செய்துள்ள இந்த டாஸ்கில், நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில், தாமரை, நிரூப், பாவ்னி, இசைவாணி மற்றும் வருண் ஆகியோரிடம் தலா ஒரு நாணயம் உள்ளது. இதனை இந்த ஐந்து பேரும் சக போட்டியாளர்கள் திருடாத வகையில் பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளதால் யார் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆவார் என்பது இன்று தெரியவரும். தற்போது அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ள நிலையில், இந்த லிஸ்டில் உள்ள மூன்று பேரிடம் தலா ஒரு நாணயம் உள்ளது எனவே இதில் யார் வெற்றிபெறுவார் என இன்று தெரியவரும்.

    இந்த நிலையில் இன்று வேறு சில டாஸ்குகளும் கொடுக்கப்படுவது இன்று வெளியான ப்ரோமோக்களில் தெரிகிறது. இரண்டாவது ப்ரோமோவில், இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் குறித்து கூற வேண்டும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. தனி அறையில் நடைபெறும் டாஸ்கில், நிரூப் பிரியங்காவின் பெயரை சொல்கிறார். அடுத்ததாக பிரியங்கா நிரூப், அபிஷேக் என கூறுகிறார். இதனை தொடர்ந்து வரும் அபிஷேக், பிரியங்காவின் பெயரை சொல்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிருப், பிரியங்கா, அபிஷேக் மூவரும் ஒன்றாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் மூவரும் மாறி மாறி அவர்களது பெயரை கூறுவதால் தாங்கள் குரூப் இல்லை என நிரூபிக்க இப்படி செய்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



    முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில், "விளையாடு அல்லது வெளியே போ" என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் மைக் இல்லாமல் பேசுவது யார்? ஆங்கிலம் பேசுவது, வீட்டில் தூங்கி கொண்டே இருப்பது யார்? என கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இறுதியாக அந்த வாக்கியங்கள் அடங்கிய போர்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் கழுத்தில் மாட்டி கொள்கின்றனர்.

    பிரியங்காவுக்கு வார்னிங் கொடுக்கும் ராஜூ பாய்.. ஓ கதை அப்படி போகுதா?

    அதில், 'ஹெலோ ஹெலோ மைக் டெஸ்டிங்' என்கிற பட்டம் அபிஷேக்கிற்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு முழுவதும் பேசிவிட்டு பகலில் தூங்கும் பிரியங்கா மற்றும் நிரூப் ஆகியோருக்கு 'இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்' என்கிற டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. எப்போதும் அதிகம் ஆங்கிலத்தில் பேசுவது அபிய் என சொல்லி அவருக்கு 'Basically, I dont know தமிழ் யா’ என்கிற பட்டம் வழங்கப்பட்டு உள்ளது."நான் நானா தான் இருக்கேன், அதனால் தான் வெட்டியா பொழுதை கழிக்கிறேன்" என சுருதி மற்றும் ஐக்கி பெரி ஆகியோருக்கு பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: