Home /News /entertainment /

பிக் பாஸ் முடிந்தும் பாவ்னி மீது ராஜூக்கு தீராத கோபம்! உண்மையில் நடந்தது என்ன?

பிக் பாஸ் முடிந்தும் பாவ்னி மீது ராஜூக்கு தீராத கோபம்! உண்மையில் நடந்தது என்ன?

ராஜூ பவ்னி

ராஜூ பவ்னி

நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட பாவ்னி மீதான கோபம் ராஜுவுக்கு தீர்ந்ததாக தெரியவில்லை.

    கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த வாரத்தில் நிறைவு பெற்றது.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ராஜு ஜெயமோகன் முதலிடத்தை பிடித்து பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாம் இடத்தையும், பாவ்னி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

    முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தன்னுடன் சக போட்டியாளர்களாக பங்கேற்ற இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரைச்செல்வி, அக்ஷரா, நிரூப், சந்திரன் உள்ளிட்ட பலரிடம் ராஜு மிக அன்பாகவும், பொறுமையாகவும் பழகி வந்தார். இந்த அன்பும், பொறுமையும் தான் ரசிகர்கள் ராஜுவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடக் காரணமாக அமைந்தது.

    வெற்றி குறித்து ராஜு தெரிவித்து கருத்து தெரிவிக்கையில், “இது தனது பொறுமைக்கு கிடைத்த பரிசு’’ என்று கூறியிருந்தார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு உறுதுணையாகவும், தன்னை ஊக்கப்படுத்தும் ஒருவராகவும் இமான் அண்ணாச்சி இருந்தார் என்று ராஜு தெரிவித்தார்.

    ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, நிகழ்ச்சியில் எல்லோரிடமும் அன்பாக பழகிய போதிலும், சக போட்டியாளரான பாவ்னியுடன் மட்டும் ராஜு அவ்வபோது மோதலில் ஈடுபட்டு வந்தார்.

    நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட பாவனி மீதான கோபம் ராஜுவுக்கு தீர்ந்ததாக தெரியவில்லை. அண்மையில் டிவிட்டரில் ரசிகர்களுடன் ராஜு உரையாடினார். அப்போது ரசிகர்கள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமாக ராஜு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

    இதையும் படிங்க.. கடைசி வரை ஸ்ருதிக்கு ஒரு நல்லது கூட நடக்காது போல! மெளன ராகம் சீரியலில் நின்ற கல்யாணம்

    இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடிக்காத பிரபலம் யார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, சற்றும் தாமதிக்காமல் தனக்கு பாவ்னியை மட்டும்தான் பிடிக்கவே பிடிக்காது என்று ராஜு பதில் அளித்தார்.

    எல்லோரிடமும் அன்பாகவும், பொறுமையாகவும் பழகி வந்த ராஜு, பாவ்னியிடம் மட்டும் இன்னமும் கோபம் குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அபினய் இடையே காதல் ஏற்பட்டபோது, ராஜு தெரிவித்த கருத்துக்கள் பாவ்னியை கோபமடைய செய்தன. இதனால், இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதை மனதில் வைத்துதான் பாவ்னி மீது தற்போது வரை ராஜு கோபத்தை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பாவ்னியை பிடிக்காது, அவரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று  ராஜு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல முறை கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க.. தாலி சென்டிமென்ட் போதும்.. வெற்றிக்கு தண்டனை வாங்கி தர போகும் அபிநயா!

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் போன்ற சீரியல் நிகழ்ச்சிகளிலும், கடந்த 2017ஆம் ஆண்டில் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்திலும் ராஜு நடித்திருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி