முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அந்த தகவல் பொய், நம்பாதீங்க.. ரசிகர்களிடம் கேட்டு கொண்ட பிக் பாஸ் ராஜூ!

அந்த தகவல் பொய், நம்பாதீங்க.. ரசிகர்களிடம் கேட்டு கொண்ட பிக் பாஸ் ராஜூ!

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் ராஜூ

இது எல்லாம் கேட்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு என தனக்கே உரிதான பாணியில் விளக்கியுள்ளார் ராஜூ.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ தன்னை பற்றி இணையத்தில் பரவிய தகவலுக்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். என்ன தகவல் அது? வாங்க பார்க்கலாம்.

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ இப்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ். பிபி நிகழ்ச்சிக்கு பின்பு ராஜூ பலராலும் அறியப்படும் முகமாக மாறினர். அவரிடம் இருக்கும் நகைச்சுவை திறமை வெள்ளித்திரை பிரபலங்களை கவனிக்க வைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சீரியல்களில் நடிப்பதை கைவிட்டவர், வெள்ளித்திரை பக்கம் கவனம் செலுத்த முடிவு எடுத்தார்.தற்சமயம் பிபி ஜோடிகள் சீசன் 2வில் பிரியங்காவுடன் சேர்ந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுப்போக சில படங்களில் துணை நடிகராகவும் நடித்து வருகிறார்.

அந்த காரணத்தினால் தான் உனக்கு டைவர்ஸ் கொடுக்கல.. உண்மையை உளறிய பாரதி!

அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தில் நெகடிவ் ரோலில் ராஜூ நடித்து இருந்தார். ராஜூவின் ரசிகர்கள் அவரிடம் இருந்து இன்னும் சிறப்பான ரோல்களை எதிர்பார்க்கின்றனர். அதற்காக ராஜூவும் நல்ல கதையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜூ குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலானது. அதாவது கார்த்தி நடிப்பில் விரைவில் திரைக்கும் வரவிருக்கும் சர்தார் படத்தில் ராஜூவும் முக்கிய ரோலில் நடித்து இருப்பதாக கூறப்பட்டது.

ராஜா ராணி 2 சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம்!

இந்த செய்தி ராஜூ ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என ராஜூ ஜெயமோகன் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜூ இதுக் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சர்தார் படத்தில் நான் நடித்திருப்பதாக பரவும் தகவல் உண்மையில்லை. ஆனால் இது எல்லாம் கேட்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு என தனக்கே உரிதான பாணியில் விளக்கியுள்ளார். கூடவே சர்தார் படக்குழுவுக்கு வாழ்த்துக்களையும்  பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv