பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டிலை வென்ற ராஜுவுக்கு கிடைத்த மொத்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் போட்டியாளர்கள் பெற்ற குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட, பாவனி, பிரியங்கா, ராஜு, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்கள். நேற்று ஒளிபரப்பப்பட்ட இதன்
இறுதிப் போட்டியில் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனி ரெட்டியும் பிடித்தனர். இதையடுத்து நான்காவது இடத்தை அமீரும், ஐந்தாம் இடத்தை நிரூப்பும் பிடித்தனர்.
50 லட்சத்துடன் முதலிடத்தைப் பிடித்த ராஜு,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சில லட்சங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 வாரங்கள் இருந்த
ராஜுவிற்கு வாரத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்களுக்கு ரூ.21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
ஆகவே, பரிசு தொகை ரூ.50 லட்சத்தையும், சம்பளம் ரூ.21 லட்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.71 லட்சத்தை ராஜு பெற்றதாகக் கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.