• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • தாமரை செல்வியால் பிக் பாஸில் வெடிக்க போகும் முதல் சண்டை!

தாமரை செல்வியால் பிக் பாஸில் வெடிக்க போகும் முதல் சண்டை!

பிக் பாஸ் தாமரை செல்வி

பிக் பாஸ் தாமரை செல்வி

"நீ சிரித்து கொண்டே கூறினாய், இதனை நான் சும்மா விடமாட்டேன் "

 • Share this:
   பிக் பாஸ் வீட்டில் மிகவும் வெகுளித்தனமாக இருக்கும் தாமரை செல்வி விளையாட்டாக கூறியதால் பிரச்னை ஏற்படுவது போல தெரிகிறது.

  விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

  இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

  இதுவரை இசைவாணி, சின்ன பொண்ணு, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி தங்களது கதையை கூறிய நிலையில் நேற்றைய நிகழ்சியில் மதுமிதா மற்றும் நமீதா தங்களது கதையை கூறினர். மதுமிதா காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்ய துணிந்தது குறித்தும் பேசினார். இதனை தொடர்ந்து பேசிய நமீதா, தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களை கண்ணீர் விட்டபடி கூறினார். நேற்றய நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து பேசியது பலரை கண் கலங்க வைத்தது. சிறுவயதிலேயே தனக்கு பெண் தன்மை இருப்பதை உணர்ந்த நமிதா பெண்ணாக மாற ஆசைப்பட்ட உணர்ந்த ஆனால் அதை பெற்றோர்கள் ஏற்க மறுத்து இருக்கிறார்கள்.

  கடைசி வரை நான் தனியா இருக்கணுமா? கணவரின் நினைவலையை பகிரும் பவானி!

  இதனால் பலமுறை அவரை அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும், அவர் பைத்தியம் என கூறி வீட்டு சிறையிலும் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் 18 வயது பூர்த்தியான பின்னர் தான் பெண்ணாக மாறி தனியாக வாழ்ந்ததாகவும், அதன் பின்னர் அவரது பெற்றோர்கள் தற்போது அவரை ஏற்றுக்கொண்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை ஒரு திருநங்கை மாடலாக நிலை நிறுத்தியிருக்கும் நமீதா, பிற திருநங்கைகளுக்கும் உதவிகள் செய்து வருகிறார்.

  சமுதாயத்தில் திருநங்கைகள் எல்லோரையும் பாலியல், பிச்சை எடுக்கவும் என மட்டுமே பார்கிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் பெற்றோர் மட்டும் தான். எங்களை மாற வேண்டும் என கூறுகிறீர்கள், நாங்கள் மாறி விட்டோம் மாற வேண்டியது நீங்கள் தான். உங்கள் வீட்டில் திருநங்கை பிள்ளைகளை இருந்தால் அவர்களை ஒதுக்காமல் ஆதரித்து அவர்களுக்கு நல்ல கல்வியை மட்டும் கொடுங்கள், அவர்கள் வாழ்க்கையை அவர்களே பார்த்து கொள்வார்கள் என்று மிகவும் வேதனையுடன் தனது கருத்தை தெரிவித்தார். "பெத்தவங்க பொறுப்பில்லை, மத்தவங்க பொறுப்பில்ல.." என்ற பாடலுடன் தனது கதையை நிறைவு செய்தார். இது அங்கிருந்த சக போட்டியாளர்களை மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்களையும் கலங்க செய்தது. மேலும் நமீதாவுக்கு அனைவரும் ஹார்ட் கொடுத்திருந்ததனர்.  இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் நமீதா, தாமரை செல்வி இடையே வாக்குவாதம் நடக்கிறது. தாமரை செல்வி, நீங்கள் நான்கு அல்ல நானூறு குழந்தைகளை கூட வளர்க்கலாம் என கூறியதாக தெரிகிறது. இதனை தவறாக எடுத்து கொண்ட நமீதா, நீ சிரித்து கொண்டே கூறினாய், இதனை நான் சும்மா விடமாட்டேன் என்கிறார். இதுகுறித்து இமானிடம், கூறும் தாமரை, நான் நல்ல விதமாக தான் கூறினேன், மன்னிப்பு கூட கேட்டுவிட்டேன் என கூறி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் நமீதாவை, இமான் அழைக்க வேண்டாம் நான் அங்கு வரவில்லை என கூறிவிட்டு செல்லும் காட்சிகள் அடங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் மிகவும் வெகுளித்தனமாக இருக்கும் தாமரை செல்வி விளையாட்டாக கூறியதால் பிரச்னை ஏற்படுவது போல தெரிகிறது. இதனால் இன்றைய நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: