ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இஷ்டம் இல்லன்னா வெளிய போ, வாயை மூடு, மக்கள் காப்பாத்துவாங்க - தாமரை, பிரியங்கா காரசாரமான மோதல்!

‘இஷ்டம் இல்லன்னா வெளிய போ, வாயை மூடு, மக்கள் காப்பாத்துவாங்க - தாமரை, பிரியங்கா காரசாரமான மோதல்!

தாமரை பிரியங்கா காரசாரமான மோதல்

தாமரை பிரியங்கா காரசாரமான மோதல்

நேற்று ஒன்று முதல் பத்து வரை தங்களை ரேங்கிங் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் டாஸ்க் கொடுத்தார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக 71 நாட்களை நிறைவு செய்துள்ளது. திங்கள் அன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் அந்த வாரத் தலைவர் போட்டி மற்றும் போட்டியில் இருந்து வெளியேற நாமினேஷன் நடக்கும். திங்கட்கிழமை எபிசோடு மிகவும் பரபரப்பாக இருக்கும். பிக் பாஸ் அவ்வபோது டிவிஸ்ட் வைப்பது வழக்கும். அதன் படி, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற ரீதியில் எல்லாருமே வெளியேற்றப் பட்டியலில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நாமினேஷன் பட்டியலில் இருந்து விலக்கம் பெறுவதற்கான டாஸ்குகள் நேற்று முதல் தொடங்கின. அதன் படி, நேற்று ஒன்று முதல் பத்து வரை தங்களை ரேங்கிங் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் டாஸ்க் கொடுத்தார். பல கட்ட கடுமையான விவாதங்களுக்குப் பிறகு, அசராமல் முதல் இடத்தில் நின்று, வெற்றி பெற்ற சிபிக்கு எலிமினேஷன் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அதன்படி 72ம் நாளான இன்று வெளியான முதல் முதல் புரோமோவே குதூகலமாக இருந்தது. சிபி தவிர்த்து மிச்சமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஒரு பேருந்துக்குள் நிற்க வேண்டும். அங்கே என்ன நடந்தாலும் வெளியே செல்லக் கூடாது. வெளியே செல்பவர்கள் நாமினேஷன் பட்டியலில் தொடர்வார்கள். இறுதி வரை யார் அங்கே நிற்கிறார்களோ அவர் தான் இந்த டாஸ்க்கின் வெற்றியாளர் மற்றும் எலிமினேஷன் பட்டியிலில் இருந்து நீக்கப்படுவார்.

இந்த டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக காணப்பட்டது. போட்டியாளர்கள் மீது தண்ணீர் ஊற்றுவது ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் அனைவரும் மூக்கைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு டாஸ்க்கில் ஏதோ ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. “பிக் பாஸ், பஸ் உள்ள அப்படி என்னத்த கொட்டினீங்க” என்று நெட்டிசங்கள் வேடிக்கையாக கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகிறார்கள். கடந்த சில வாரங்களாக, தாமரை மற்றும் பிரியங்கா இடையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

விளையாட்டே தெரியாத தாமரைக்கு பிரியங்கா தான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், பிரியங்காவையே வெச்சு செய்கிறார் தாமரை என்றெல்லாம் விவாதங்களும் கருத்துகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. தற்போது வெளியான இரண்டாவது புரோமோவில் மீண்டும் தாமரையும் பிரியங்காவும் அடித்துக் கொள்கிறார்கள்.

Also read... உருவ கேலி.. அவமானங்களை தாண்டி காதலால் ஜெயித்த விஜய் டிவி சரத் - கிருத்திகா!

“யாருக்கு அநியாயம் நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்” என்று பிரியங்கா கத்த, அதற்கு ஏன் பேசுற என்று தாமரை கேட்க, பிக் பாஸ் குடுக்கும் தடை தாண்டி நீயும் ஒரு தடையா இருக்க என்று பிரியங்கா கூறினார்.

அதற்கு அதிரடியாக இஷ்டம் இருந்தா இரு, இல்லன்னா வெளிய போ என்று கூற, தாமரையை பஸ்சின் வெளியே அனுப்ப வேண்டும் என்று முயற்சியில் பிரியங்கா நீ எதுக்கும் அசர மாட்றியே என்று பதில் கூற, விவாதம் வலுக்கிறது. பிரியங்கா எதையோ பேச வர, தாமரை “நீ வாய மூடு” என்று பிரியங்காவை ஆஃப் செய்து விட்டார். மேலும், மக்கள் என்னை காப்பாத்திடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

1௦ வாரங்களுக்குப் பிறகு விறுவிறுப்பான டாஸ்க் மூலம் சூடு பிடித்திருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. மேலும், இந்த ப்ரோமோவின் படி, ராஜு மற்றும் சஞ்சீவ் டாஸ்க்கில் இருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது.

First published:

Tags: Bigg Boss Tamil 5