• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: உண்மையை போட்டுடைக்கும் கமலஹாசன் - பாவ்னிக்கு குறும்படமா?

Bigg Boss Tamil 5: உண்மையை போட்டுடைக்கும் கமலஹாசன் - பாவ்னிக்கு குறும்படமா?

பாவ்னி

பாவ்னி

நாணயத்தை திருடியது தவறு இல்லை என்றாலும், தாமரை உடை மாற்றும் அறையில் இருந்த நேரத்தில் பாவ்னி அவருக்கு உதவுவதாக திட்டமிட்டு சென்று, அங்கு ஸ்ருதியை வரவைத்து காயின் திருடப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பிரச்சனையானது.

  • Share this:
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறிய நிலையில் தற்போது இசைவாணி, ராஜு, மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப் ஆகிய 15 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் பாவ்னி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் உள்ளனர். இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் நாளை வெளியேற்றப்படுவார். இந்த வாரம் சின்ன பொண்ணு அல்லது அபினய் வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் பெற்று நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐந்து நாணயங்களை கைப்பற்றும் நபர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெற்று பாவ்னி, இசைவாணி, நிரூப், தாமரை மற்றும் வருண் ஆகிய ஐந்து பேரிடம் ஐந்து நாணயங்கள் உள்ளன. இந்த நாணயங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இருக்க வேண்டும், நாணயத்தை வேறு ஒரு திருடி விட்டால் அந்த அதிகாரம் திருடிவருக்கு சென்று விடும் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தாமரையின் நாணயத்தை பாவ்னியின் துணையுடன் ஸ்ருதி திருடினார். ஸ்ருதி பாவ்னியிடம் சென்று தாமரையின் நாணயத்தை திருடுவோமா? என கேட்டார். அதற்கு பாவ்னி எனக்கு வேண்டாம் , நீ வேண்டுமானால் திருடு என்றார். அதற்கு ஸ்ருதி, ஓகே நீ எனக்கு தாமரையை திசை திருப்ப எனக்கு உதவி செய் என கேட்டார். அதற்கு பாவ்னியும் ஓகே சொல்லி ஸ்ருதிக்கு உதவி செய்து நாணயத்தை திருடி விட்டனர்.

நாணயத்தை திருடியது தவறு இல்லை என்றாலும், தாமரை உடை மாற்றும் அறையில் இருந்த நேரத்தில் பாவ்னி அவருக்கு உதவுவதாக திட்டமிட்டு சென்று, அங்கு ஸ்ருதியை வரவைத்து காயின் திருடப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பிரச்சனையானது. நாணயத்தை கேட்டிருந்தால் நானே கூட கொடுத்திருப்பேன், உடை மாற்றும் போது திருடியது துரோகம் என்பது தாமரையின் கருத்து.

நாணயத்தை திருட வேண்டும் என்பது தான் டாஸ்க், நாணயத்தை உடலிலேயே வைத்திருந்தால் எப்படி திருடுவது? அதனால் தான் செய்தது தவறு இல்லை என ஸ்ருதி கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பாவ்னி தன் மீது எந்த தவறும் இல்லாதது போல நான் ஸ்ருதிக்கு உதவவே இல்லை என கூறி கொண்டிருந்தார். இந்த பிரச்னை குறித்து சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி, பாவ்னிக்கு எதிராக கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டு இருக்கிறது.

மேலும் நெட்டிசன்களே குறும்படம் போட்டு பாவ்னி, ஸ்ருதிக்கு உதவி செய்ததை காட்டியுள்ளனர். இந்த சலசலப்பு கமல்ஹாசன் கண்களில் படாமல் இருக்குமா?, ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரம் முழுவதும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரச்சனையாக தாமரை நாணயத்தை திருடிய சம்பவம் பார்க்கப்படுகிறது.


இந்தநிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், கமல், பாவ்னியிடம் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்புகிறார். அப்போது உண்மை என்பது எப்போது யாரிடம் கூறினாலும் ஒரே விஷயமாக இருக்க வேண்டும். நீங்கள் பேசும்போது நாங்கள் திட்டமே போடவில்லை என கூறினீர்கள், ஆனால் நாங்கள் பார்த்தது நீங்களும், ஸ்ருதியும் நான் இதனை செய்ய போகிறேன், இப்படி செய்ய போகிறேன், அப்போது நீ நாணயத்தை எடுத்து விடு என திட்டமிட்டீர்கள் என உண்மையை போட்டு உடைத்துவிடுகிறார்.

Also read... தெலுங்கில் 600 திரையரங்குகளில் எனிமி...!

இதனை கேட்டு இல்லை சார், என பாவ்னி பதற்றம் அடையும் நிலையில், தான் செய்தது சரியா? தவறா? என்ற சந்தேகம் இருக்கும்போது தான் மாற்றி மாற்றி பேச வேண்டிய நிலை வரும் என கமல் அதிரடியாக பேசும் காட்சிகள் உள்ளது. பாவ்னி இல்லை என மறுப்பதால் இன்று குறும்படம் போட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்த சம்பவம் இன்று நடைபெற இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: