Bigg Boss Tamil: தொடங்கியது பிக் பாஸ் ஷூட்டிங்! போட்டியாளர்கள் யார் யார்?

கமல் ஹாசன்

இந்த மாத கடைசியில் பிக் பாஸ் 5-ம் சீசனின் டீசர் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    பிக் பாஸ் 5-ம் சீசன் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக, ஜூன் மாதம் தொடங்க வேண்டிய நிகழ்ச்சி அக்டோபர் மாதத்துக்கு தள்ளிப்போனது. ஜனவரி மாதம் முடிந்த இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார் ஆரி.

    இந்நிலையில் இந்த வருடமும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் 5 அக்டோபர் மாதத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது. வழக்கம் போல பிக் பாஸ் போட்டியாளர்கள் யார், யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றெல்லாம் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV News (@tamiltvnews)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த மாத கடைசியில் பிக் பாஸ் 5-ம் சீசனின் டீசர் வெளியாகலாம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றால், இனி அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என செய்திகள் முன்பு வெளியாகின.

    இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட்ட கமல் உட்பட யாரும் வெற்றி பெறாததால், அவரே மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: