Home /News /entertainment /

பிக் பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா - உற்சாகத்தில் நிரூப்!

பிக் பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா - உற்சாகத்தில் நிரூப்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

சமீபத்தில் கார் விபத்தில் சிக்கியிருந்த யாஷிகா, கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்தார். இந்தநிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முழுமையாக குணமடைந்து வந்திருப்பது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 80வது நாளை எட்டியுள்ளது. இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த வார லக்ஸரி டாஸ்காக ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இதில் ஃப்ரீஸ், ரிலீஸ், லூப், ரீ வைண்ட் போன்ற வார்த்தைகள் நிறைய இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் முதலில் அக்ஷ்ராவின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.

    நேற்றைய நிகழ்ச்சியில் அக்ஷ்ராவின், அண்ணா மற்றும் அம்மா வந்தனர். இதனை தொடர்ந்து சிபியின் அப்பா மற்றும் அவரது மனைவி வந்திருந்தனர். இதனால் நேற்றைய நிகழ்ச்சி உணர்ச்சிவசமாகவும், கலகலப்பாகவும் சென்றது.

    இந்தநிலையில் இன்று யாருடைய உறவினர்கள் எல்லாம் வருவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நிரூப்பை பார்க்க நடிகை யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், யாஷிகாவை பார்த்தவுடனே நிரூப் ஓடி வருகிறார்.

    அப்போது யாஷிகா, நீ நன்றாக விளையாடி கொண்டிருக்கிறாய், உன்னை நினைத்து நான் பெருமையடைகிறேன் என கூறுகிறார். பின்னர் அனைவரிடமும் பேசும் காட்சிகள் உள்ளது. அனைவரும் சந்தோசமாக இருங்கள் என கூறும் யாஷிகா, ராஜூவை பார்த்து நீங்கள் முன்னர் இருந்தது போல கலகலப்பாக இருங்கள் என கூறும் காட்சிகள் உள்ளது.

    முன்னதாக கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய நிரூப், நான் பிக் பாஸ் வருகிறேன் என சொன்னபோது யாஷிகாவின் முன்னாள் காதலர் வருகிறார் என செய்திகள்வெளியானது. அவர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட எனக்கு அது பெருமையான விஷயம்தான். அதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது. உனக்கு அசிங்கமாக இல்லையா? என சிலர் என்னிடமே கேட்டார்கள். இதிலென்ன அசிங்கம், அது தான் உண்மை எனக்கு அவர் தான் ஒரு வாழ்க்கையை காட்டினாள். இதனை ஏன் மக்கள் தவறாக நினைக்கிறார்கள், ஒரு பெண்ணால் பையன் வளரவே கூடாதா? என அதிரடியாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க - அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ‘விசில் தீம்’ வெளியீடு!



    சமீபத்தில் கார் விபத்தில் சிக்கியிருந்த யாஷிகா, கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்தார். இந்தநிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முழுமையாக குணமடைந்து வந்திருப்பது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நிரூப்பின் அப்பா வரும் காட்சிகள் உள்ளது. மேலும் இரண்டாவது ப்ரோமோவில், ராஜுவின் அம்மா மற்றும் மனைவி வரும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி