Home /News /entertainment /

கடினமாகும் டாஸ்க்... பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்?

கடினமாகும் டாஸ்க்... பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் 4 வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபினய் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்‌ஷரா, வருண் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் 4 வழங்கப்படுகிறது. அதில் போட்டியாளர்கள் ஒரு கட்டத்தில் நின்று, கேட்கப்படும் கேள்விகளுக்கு ஹவுஸ் மேட்ஸ் கூறும் பதிலுடன் ஒத்துப் போனால் முன்னோக்கி நகர வேண்டும், எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதில் எந்த இரண்டு நபர்கள் ஃபினிஷ் மார்க்கை எட்டுகிறார்களோ, அவர்கள் இறுதிக்கட்டத்தை எட்டுவார்கள் என்றும் பிக் பாஸ் அறிவிப்பில் குறிப்பிடப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி