Home /News /entertainment /

பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்?

பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ்

பிக் பாஸ்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் அறிவித்த பணம் 5 லட்சமாக மாறி பின்னர் 7 லட்சமாக மாறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அக்‌ஷரா - வருண் இருவரும் ஒன்றாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் அறிவித்த பணம் 5 லட்சமாக மாறுகிறது. அப்போது ’ஒரு ஜீரோ, இங்க ஒரு ஃபோர் போட்டீங்கன்னா நான் எடுத்துட்டு போய்ட்டே இருப்பேன்’ என்கிறார் பிரியங்கா. ’அங்க 7 இருந்தா எடுத்துட்டு போவேன்’ என்ற நிரூப், பாவனியிடம் அவரது விருப்பத்தைக் கேட்கிறார். அதற்கு ’ஒரு 15 இருந்தா எடுத்துக்குவேன்’ என்கிறார். அந்த நேரம் பிக் பாஸின் அமவுண்ட் 7 லட்சமாக உயர, ‘25 வரைக்கும் போகும்ன்னு சொல்லிருக்காங்க’ என்கிறார் நிரூப்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி