• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: தாமரை-மதுமிதா இடையே மோதல் - என்ன காரணம்?

Bigg Boss Tamil 5: தாமரை-மதுமிதா இடையே மோதல் - என்ன காரணம்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த டாஸ்க்கிலும் மோதல் ஏற்படுவது தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறியுள்ளனர். தற்போது இசைவாணி, ராஜு, மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப் ஆகிய 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு நாமினேஷன் வித்தியாசமாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நாமினேஷனில் எந்த இரண்டு நபர்கள் வெளியேறாமல் இருக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ அவர்களை காப்பாற்றலாம் என பிக் பாஸ் அறிவித்தார். இதில் மூன்று வாக்குகள் பெற்றவர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன்படி பிரியங்கா, ராஜு, இமான், தாமரை ஆகிய நான்கு பேரை சக போட்டியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

    மீதமுள்ள அக்ஷ்ரா, சிபி, நிரூப், மதுமிதா, ஐக்கி, பாவ்னி, இசைவாணி, அபினய், ஸ்ருதி ஆகிய ஒன்பது பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் யார் இந்தவாரம் வெளியேறுவார் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாலியான ஜாஸ்க்குகள் கொடுக்க தொடங்கி இருப்பது இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் உறுதியானது. அதில் "சினிமா சினிமா" என்ற பெயரில் தொடங்கும் இந்த டாஸ்கில், ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கதாபாத்திரத்திற்கான பாடல் ப்ளே செய்யப்படும் போதெல்லாம் நீங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து நடனம் ஆட வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். சிபிக்கு - ரஜினிகாந்த், வருண் - ரோபோ, இசைவாணி - சந்திரமுகி, மது - புலிகேசி கதாபாத்திரங்களில் இருப்பது ப்ரோமோவில் தெரிகிறது. இதனால் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த டாஸ்க்கிலும் மோதல் ஏற்படுவது தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது.

    இதில் மதுமிதா மற்றும் தாமரை சண்டை போடுகின்றனர். அதில் எதற்கு அவ, இவ என பேசுகிறாய் என தாமரை, மதுமிதாவுடன் கேட்கிறார். அதற்கு மது, இது கெட்ட வார்த்தை இல்லை என விளக்கம் கூற முயற்சிக்கும் போது தாமரை கத்தி பேசுகிறார். அதற்கு மது, என்னிடம் இப்படி கத்தாதீர்கள் என கேட்க, தாமரையோ அப்படி தான் பேசுவேன் என்கிறார். நீங்கள் யார் இப்படி என்னிடம் கத்தி பேச, எனக்கும் கத்தி பேச தெரியும் என மது கூறுகிறார்.



    பின்னர் அவரை வருண், ஸ்ருதி ஆகியோர் சமாதானப்படுத்தி அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளது. மதுமிதா தமிழை பூர்விகமாக கொண்டவர் என்றாலும், ஜெர்மனியில் இருந்து வந்திருப்பதால் அவரது பேச்சு வழக்கு சற்று வித்தியாசமாக உள்ளது. இதனை தாமரை தவறாக எடுத்து கொண்டு சண்டை போடும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்றும் பரபரப்பாக இருக்கும் என்றே எதிர்பாக்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: