• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: நிரூப் - பாவனி இடையே வெடிக்கும் சண்டை

Bigg Boss Tamil 5: நிரூப் - பாவனி இடையே வெடிக்கும் சண்டை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிரூப், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.



    இந்நிலையில் நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிரூப், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நிரூப் - பாவனி இடையே சண்டை நடக்கிறது. ’தூங்காத ஆள் வெளிய வந்து தூங்கிக்கட்டும்’ என பாவனி சொல்ல, ‘இதுக்கு ஒரு காரணம் சொல்லி தான் தூங்க வைக்கணும்ன்னு பிக் பாஸ் சொல்லிருக்காரு’ என்கிறார் நிரூப். காரணத்தைக் கேட்கும் பாவனியிடம், ‘சும்மா இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணாத’ என்கிறார் நிரூப். ‘எல்லாத்துக்கும் என் பேரு ஃப்ரீயா கிடைச்சிட்டு இருக்கு, மோசமான பெர்ஃபார்மென்ஸ்ல என் பேரு வருது’ என புலம்புகிறார் பாவனி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: